
புதுக்கோட்டை பொற்பனைக் கோட்டையில் புதிய பஸ் போக்குவரத்து வழிதடங்களை சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்தார்!
புதுக்கோட்டை அருகிலுள்ள பொற்பனைக் கோட்டை முனீஸ்வரர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சுற்றுப்புற கிராமத்தில் அதிகம்பேர் வசித்து வருகின்றனர். மேலும் கோவிலுக்கு பக்தர்கள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர்.
04-7-2021 ஞாயிற்றுக்கிழமை இன்று முதல் பஸ் போக்குவரத்து வழிதடங்களை சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.
இந்தப் பேருந்து ஆலங்குடி மாஞ்சன்விடுதி, பாப்பாம்பட்டி வம்பன் ரோடுபொற்பனைக் கோட்டைமுனீஸ்வரர் திருக்கோவில் இம்னம்பட்டி, திருக்கட்டளை ஆகிய ஊர்வழியாக புதுக்கோட்டை செல்கின்றது.
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா,புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் இளங்கோவன், துணை மேலாளர் (வணிகம்) சுப்பு, வட்டாட்சியர் பொன்மலர் மற்றும் . பொற்பனைக் கோட்டை முனீஸ்வரர் திருக்கோவில் பழனியப்பன் பூசாரி ,அடைக்கலம் பூசாரி உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் சமூகஆர்வலர்கள் பக்தர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
பொதுமக்களிடமும் பூசாரிகளிடமும் சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்!
செய்தி: டீலக்ஸ் சேகர், புதுக்கோட்டை