December 5, 2025, 5:18 PM
27.9 C
Chennai

இன்றைய தலைவரே! நாளைய முதல்வரே! கலக்கும் போஸ்டர்கள்! கலகலக்கும் காட்சிகள்!

poster annamalai as cm - 2025

கரூரில் பாஜக தலைவராக அண்ணாமலை அறிவிக்கப்பட்ட நிலையில் நாளைய முதல்வரே என போஸ்டர் ஒட்டி தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர், பாஜக நிர்வாகிகள்! மேலும், நாளைய முதல்வரே என்ற வாசகம் இடப்பெற்றிருப்பதினால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது!

கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தை அடுத்த தொப்பம்பட்டியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர். தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் ஈடுபட்டார்.

பாஜக.,வில் சேர்ந்த அவருக்கு, பாஜக., தலைமை மாநில துணைத் தலைவராக பதவி அளித்து கௌரவித்தது. அத்துடன், கடந்த 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக., வேட்பாளராக நிறுத்தப்பட்டு தேர்தல் களத்தில் சிறிதளவு வாக்குகள் வித்யாசத்தில் தனது வெற்றியை பறிகொடுத்தார்.

பள்ளப்பட்டி பகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை உள்ளே நுழைய தடை என்று கூறி ஜமாத் முடிவு செய்த நிலையில், பள்ளப்பட்டி பாகிஸ்தானில் இல்லை, நமது இந்தியாவில் தான் உள்ளது. ஆகவே ஒவ்வொரு இந்தியனும் வாக்குகள் சேகரிக்க செல்லலாம் என்று முதன்முதலில் பள்ளப்பட்டி பகுதியில் பாஜக நுழைந்தது என்றால் அது இவரால் தான் முடியும் என்று பேசவைதஹ்து!

இதுமட்டுமின்றி, பள்ளப்பட்டி பகுதியில் உள்ள இஸ்லாமியர்களின் நம்பிக்கையையும் இவர் பெற்றார். ஆயினும், அமைப்பு ரீதியாக சிலர் கூடி மத ரீதியாக வாக்குகளை இவருக்கு எதிராக ஒன்றிணைத்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அண்ணாமலை பாஜக., மாநிலத் தலைவராக அறிவிக்கப்பட்டார். இதை அடுத்து இவருக்கு தமிழகம் முழுவதும் ஆதரவுக் குரல் எதிரொலித்தது. பாஜக.,வின் மாநிலத் தலைமைக்கான அறிவிப்பைக் கொண்டாடும் விதமாக மாநிலம் முழுதும் பாஜக.,வினரும், இளைஞர்களும் வெடிகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இது போல் கரூர் பாஜகவினர் ஆங்காங்கே பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். பாஜக., சார்ந்த பொறுப்பாளர்கள் போஸ்டர்களை கரூர் நகர் முழுவதும், மாவட்டம் முழுவதும் ஒட்டியிருந்தனர். அதில், ’நாளைய முதல்வரே!’ என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டி வருகின்றனர்.

அதில் கரூர் மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரில், ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே சட்டம் என தலைப்பிட்டு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இன்றைய தலைவரே, நாளைய முதல்வரே பணி சிறக்க வாழ்த்துக்கள் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் கரூர் நகரில் முக்கிய சாலைகளான பழைய பை – பாஸ் சாலை, வடக்கு பிரதட்சணம் சாலை, கோவை சாலை, ஜவஹர் பஜார் உள்ளிட்ட இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் தமிழக அளவில் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories