செல்போன் சார்ஜ் செய்யும் போது நேர்ந்த விபரீதம்!

சற்றுமுன் தமிழகம்
cell - 2026

செல்போனில் சார்ஜ் ஏற்றிய போது அதிலிருந்து ஏற்பட்ட தீ விபத்தில் மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமானது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வடக்குரெட்டி தெருவில் சதாசிவம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் இருக்கின்றார்.

இவர் தனது செல்போனை வீட்டிலுள்ள சோபாவின் மீது வைத்து சார்ஜ் போட்டு விட்டு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து சிறிது நேரம் கழித்து வீட்டிற்குள் இருந்து அதிக புகை வெளிப்பட்டதால் தீயணைப்பு நிலையத்திற்கும், மின்சார துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த மின்சார துறையினர் அந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர்.

அதன்பின் தீயணைப்பு வீரர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தினால் வீட்டில் இருந்த சோபா, மெத்தை, குளிர்சாதனப்பெட்டி, துணி துவைக்கும் எந்திரம், டி..வி.போன்றவவை எரிந்து நாசமானது.

இதுகுறித்து தீயணைப்புதுறையினர் நடத்திய விசாரணையின்போது, செல்போனில் சார்ஜ் ஏற்றியபோது வெடித்து தீ விபத்து நடந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.