rajapalayam lady body in well3 - 2026

விருதுநகர் மாவட்டத்திலுள்ள காமராஜபுரம் என்னும் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. இவர் தனது உடலில் ஆப்ரேஷன் செய்ததால் தனது தாய் வீடான பாக்கிய ஜோதியுடன் தங்கியுள்ளார்.

இதனை அடுத்து சங்கீதாவின் மகன் லியோன் (வயது 11) என்பவர் அப்பகுதியில் உள்ள புறா, கிளி போன்றவற்றினை பிடிப்பதற்காக அடிக்கடி வெளியில் செல்வது வழக்கம் .

இதனை அடுத்து வழக்கம்போல வேட்டையாடுவதற்காக காட்டுக்குள் சென்ற அவரை இரவு வரை வீடு திரும்பவில்லை .

இதில் சந்தேகம் அடைந்த சங்கீதா தனது தாய் பாக்கிய ஜோதியிடம் உடனடியாக தெரிவித்து அக்கம்பக்கத்தினர் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை .

உறவினர்கள் அனைவரும் அப்பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தேடிவந்தனர். அப்பொழுது அதே பகுதியில் உள்ள தனியார் கிணற்று ஒன்றில் தண்ணீரில் லியோன் உடல் மிதந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது .

சம்பவ இடத்துக்கு சென்ற பாக்கிய ஜோதி லியோன் உடலைப் பார்த்து அருகிலிருந்த வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

உடனே சம்பவ இடத்திற்கு சென்ற வச்சக்காரப்பட்டி போலீசார் வியோன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

இதனையடுத்து சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்ததை அடுத்து வச்சக்காரப் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending