Bear - 2026

கரடிகள் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதிக்குள் அதிகாலை நேரத்தில் 3 கரடிகள் நுழைந்து விட்டது. இந்த மூன்று கரடிகளும் தூய்மை பணியாளர்களை விரட்டியுள்ளது.

இதனையடுத்து அந்த 3 கரடிகளும் அங்குள்ள வயல்வெளிக்குள் சென்ற காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது குடியிருப்பு பகுதிக்குள் கரடிகள் அடிக்கடி நுழைந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் அச்சத்தில் இருக்கின்றனர்.

எனவே வனத்துறையினர் அட்டகாசம் செய்யும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending