
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் சர்சைக்குரிய வகையில் பேசி கைதாகி சிறையில் இருக்கும் ஜார்ஜ் பொன்னையா பேசிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் உட்பட எட்டு பேர் மீது மார்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் சிறைவைத்து கற்பழிப்பு உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த ஆர்ப்பாட்ட போராட்டத்தில் இந்துமதம் , பாரதமாதா, மத்திய, மாநில அரசுகள் குறித்து இழிவாக பேசி அருமனை காவல்நிலையத்தில் 7பிரிவுகளின்படி வழக்கு பதிவு செய்து சிறையில் இருக்கும் ஜார்ஜ் பொன்னையாவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளரான ஸ்டீபன் அவரும் அதே வழக்கில் கைதாகி தற்போது தூத்துகுடி சிறையில் இ8ருக்கிறார்.
இவர்மீது ஏற்கனவே 25 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.
இந்த நிலையில் இவர் உட்பட எட்டு பேர் மீது குமரியை சேர்ந்த பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
கணவனை பிரிந்து வாழும் அந்தப்பெண் திருமண தகவல் மையம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார் அதன் உரிமையாளரான ஜெபர்சன் என்பவர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அந்த பெண்ணை கற்பழித்ததாகவும் அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு அந்தப்பெண்ணை பலமுறை பயன்படுத்திக்கொண்டுள்ளார்.

நாகர்கோவில் என்.ஜி.ஓ காலணி வீட்டில் அடைத்து வைத்து அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் உட்பட பலருக்கு விருந்தாக்கியுள்ளார்.
இது சம்பந்தமாக கடந்த ஏப்ரல் மாதம் அந்தப்பெண் புகார் அளித்ததால் ஜெபர்சன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதன் பிறகு அவரது தற்கொலைக்கு இந்த பெண் புகார் அளித்ததே காரணம் என ஜெபர்சனின் மனைவி புகார் அளித்திருப்பதாக போலீசார் கூறி அந்த வழக்கை கிடப்பில் போட்டுள்ளனர்.
தொடர்ந்து ஸ்டீபன் உட்பட இந்த வழக்கில் தொடர்புடையோர் பல மிரட்டல்கள் விட்டு வந்ததால் பயத்தில் அமைதியாக இருந்த அந்த பெண் தற்போது கடந்த 26 ம் தேதி ஸ்டீபன் கைதாகியுள்ள சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளனர்.
இதன் பேரில் மார்தாண்டம் மகளிர் போலீசார் ஸ்டீபன், கபர்ஸ் ஜெபராஜ் உட்பட எட்டுபேர் மீது ஆறு பிரிவுகள் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இத்தணை அழுக்கோடு உலவிய இவர்களுக்கு நம் பூமியும் பாரதியும் அழுக்கா? பாரதமாதாவும் பூமிதேவியும் இவர்களை போன்றோரை சுமந்தே அழுக்கானார்கள். என மக்கள் இவர்கள் செயலால் அருவருப்பு அடைகின்றனர்