தமிழ் பிராமி எழுத்துகளில் எழுதும் மாணவி! குவியும் பாராட்டு!

moshika
moshika

தமிழில் உள்ள ஆத்திச்சூடி, நன்னூல் போன்ற நீதி நூல் மற்றும் இலக்கிய வரிகளை தமிழ்ப் பிராமி எழுத்துகளில் எழுதி கோவையை சேர்ந்த மாநகராட்சி பள்ளி மாணவி அசத்தி வருகிறார்.

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்தவர் கே.செல்வக்குமார். இவருக்கு, மனைவி ஜீவிதா மற்றும் இரு மகள்கள் உள்ளனர். திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வரும் செல்வக்குமார், ஜீவிதாவின் படிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்குடும்பத்துடன் கோவை இராமலிங்கம் காலனிக்கு குடி பெயர்ந்துள்ளார்.

பிள்ளைகளை அதே பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் சேர்த்துள்ளார். மூத்த மகள் மோஷிகா (8) இராமலிங்கம் காலனி மாநகராட்சி தொடக்க பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

பள்ளி படிப்பு தொடக்கம் முதலே தமிழ் எழுத்துகளை திருப்பி எழுதுவது போன்ற விஷயங்களில் ஆர்வம் செலுத்தி வந்த மோஷிகா, கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி மூடப்பட்ட காரணத்தால் வீட்டில் தனது தாயார் உதவியுடன் கல்வி மற்றும் கூடுதலாக பிற மொழிகளில் எழுதுதல் போன்றவற்றை கற்றுக் கொண்டுள்ளார்.

அவ்வாறாக கற்றுக் கொண்டவர் பெற்றோர் வழிகாட்டுதலின்படி தமிழி எனப்படும் பண்டைக் காலதமிழ்ப் பிராமி எழுத்து முறைகளையும் கற்றுக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து கற்றுக் கொண்டதன் அடிப்படையில் நீதி நூல்களான ஆத்திச்சூடி, மூதுரை, இலக்கிய நூலான நன்னூலில் உள்ள வரிகளை தமிழ்ப் பிராமி எழுத்துகளில் எழுதி தமிழி என்ற பெயரில் தமிழ்ப் பிராமி எழுத்து கற்றல் கையேடு ஒன்றை உருவாக்கியுள்ளார்.

இவரது செயல்பாட்டையும், ஆர்வத்தையும் அறிந்த கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சிஅலுவலகத்தில் இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் மாணவி மோஷிகாவை அவரது பெற்றோருடன் நேரில் அழைத்து பாராட்டியதுடன், மாணவியின் கற்றல் திறனைவளர்க்க உதவும் வகையில் கையடக்க கணினி ஒன்றையும் அன்பளிப்பாக அளித்தார்.

மாநகராட்சி ஆணையரின் பாராட்டுக்குப் பிறகு மாணவி மோஷிகாவின் செயல்பாடு குறித்து றிந்த பலரும் அவருக்கு பாராட்டு களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிகழ்வுக்குப் பிறகு மாநகராட்சி மத்திய மண்டலத்தில் உள்ள வளாக சுற்றுச்சுவர் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் எழுத்துகள்மற்றும் அவற்றுக்கான தமிழ்ப் பிராமி எழுத்துகள் எழுதப்பட்டுள் ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சிறுமியின் தந்தைகே.செல்வக்குமார் கூறும்போது, ‘பேருந்துகளில் பயணம் செய்யும்போது, பேருந்து கண்ணாடிகளில் மாறுபட்ட வடிவத்தில் தெரியும் எழுத்துகளை ஆரம்பத்தில் படிக்கத் தொடங்கினார்.

சில நாட்களில் தமிழ் எழுத்துக்களை இடதுபுறமாக இருந்து எழுதினார். பிறகு தாயாரின் வழிகாட்டுதலின்படி தமிழ்ப் பிராமி எழுத்துகள் குறித்து அறிந்து கொண்டு, குறிப்பிட்ட நாட்களில் சுயமாக தமிழ் எழுத்துகளுக்கான தமிழ்ப் பிராமிகுறியீடு, வாக்கியங்களை எழுதப்பழகி விட்டார். அடுத்து திருக்குறளை தமிழ்ப் பிராமி எழுத்துகளில் எழுத முயற்சித்து வருகிறார்’என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories