முதலிரவுக்கு வாடகைக்கு விடப்படும் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகை!

first night
first night

ஆந்திராவில் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைகழக விருந்தினர் மாளிகை முதலிரவுக்காக வாடகைக்கு விடப்பட்டது குறித்து விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைகழகம் அமைந்துள்ளது.

பல்கலையின் விருந்தினர் மாளிகையில் உள்ள அறை ஒன்றை, அங்கு பெண்கள் அதிகாரமளித்தல் துறை தலைவராக உள்ள ஸ்வர்ணகுமாரி என்பவர் பெயரில் கடந்த ஆக.,18 மற்றும் 19ம் தேதிகளில் புதுமண தம்பதியின் முதலிரவுக்காக வாடகைக்கு எடுத்துள்ளார்.

அன்றைய தினங்களில் அந்த அறை நன்றாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அந்த அறையை, ஊழியர்கள் சிலர் அலங்காரம் செய்ததுடன் அதனை வீடியோவாக எடுத்துள்ளனர்.

அந்த அறையை பயன்படுத்திய, தம்பதியினரும் அறை அலங்காரத்தை வீடியோ எடுத்து நண்பர்களுக்கு அனுப்பியதுடன். அறையை பயன்படுத்தி உள்ளனர்.

இது சமூக வலைதளங்களில் பரவ, விருந்தினர் மாளிகை அறை வாடகைக்கு விடப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. மேலும் அருகில் இருந்த அறைகளிலும் யாரின் அனுமதியின்றி, தம்பதியின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்களும் தங்கியிருந்தனர்

கவுரவ பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்காக ஒதுக்கப்படும் இந்த அறை முதலிரவுக்காக வாடகைக்கு விடப்பட்டது குறித்து அறிந்த மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இதனால், பல்கலையின் புனிதம் கெட்டு விட்டதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கினர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை அறித்து, இரண்டு நாட்களில் அளிக்க பல்கலை பதிவாளர் ஸ்ரீனிவாச ராவ், 5 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து உள்ளார். குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, அந்த அறிக்கை, மாநில உயர்கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து ஸ்ரீனிவாசராவ் கூறுகையில், பேராசிரியரின் மாணவருக்காக அந்த அறையை, பல்கலை ஊழியர் முன்பதிவு செய்துள்ளார். ஆனால், அறையை முன்பதிவு செய்வதற்கான நோக்கம் தவறானது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.

அனைத்து குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார். மாநில பெண்கள் ஆணைய தலைவியும், விருந்தினர் மாளிகை அறை வாடகைக்கு விடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்க மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories