வெப் சீரிஸில் நிர்வாணமாக நடிக்கும் சமந்தா!

Published:

samantha
samantha

தெலுங்கு சினிமாவில் தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார் சமந்தா.

தொடர்ந்து தமிழில் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி, நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, அஞ்சான், கத்தி, பத்து எண்றதுக்குள்ள, தங்க மகன், தெறி, 24, மெர்சல் இரும்புத்திரை, சீமராஜா, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். கடைசியாக தெலுங்கில் ஜானு என்ற படத்தில் நடித்தார் சமந்தா.

ஜானு படம் தமிழில் விஜய் சேதுபதி த்ரிஷா நடிப்பில் உருவான 96 படத்தின் ரீமேக் ஆகும். இதில் த்ரிஷா கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை சமந்தா.

தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தி ஃபேமிலி மேன் என்ற டெலிவிஷன் சீரிஸிலும் நடித்து வருகிறார் நடிகை சமந்தா. நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைத்தன்யாவும் கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

திருமணத்திற்கு பிறகு பல நடிகைகளின் மார்க்கெட் குறைந்து இருந்த இடம் தெரியாமல் சென்று விடுகிறார்கள். ஆனால் சமந்தா விஷயத்தில் அப்படியே எதிர்மாறாக உள்ளது.

திருமணத்திற்கு பிறகுதான் அவரது மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. திருமணத்திற்கு பிறகு சமந்தா நடித்த அனைத்து படங்களும் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

அதேநேரத்தில் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் சமந்தா. சமீபத்தில் அவரது நடிப்பில் தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸ் வெளியானது. இதில் காரியத்துக்காக படுக்கையை பகிரும் இலங்கை தமிழ் பெண்ணாக நடித்திருந்தார் சமந்தா.

Samantha 4
Samantha 4

இதனால் கடும் கண்டனத்திற்கு ஆளானார். அவரது கதாப்பாத்திரத்திற்காக தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்தது.

இதுதொடர்பாக மவுனம் காத்து வந்த நடிகை சமந்தா அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஃபேமிலி மேன் 2 படத்தில் நடித்ததற்காக மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை சமந்தா. அதாவது, வெப் சீரிஸ் ஒன்றில் நடிகை சமந்தா ஆடையின்றி நிர்வாணமாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரியன் வெப் சீரிஸ் ஒன்று ரீமேக் செய்யப்படுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ள இந்த வெப் சீரிஸில் நடிகை சமந்தா முதன் முறையாக ஆடை எதுவும் இல்லாமல் நிர்வாணமாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நிமிட காட்சிகளில் ஆடையில்லாமல் நடிக்க உள்ளாராம் சமந்தா.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

இந்த வெப் சீரிஸ் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமந்தா நிர்வாணமாக நடிக்கவுள்ளதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகை அமலா பால் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்த பிறகுதான் தமிழ் சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் வெப் சீரிஸ்களே கதி என உள்ளார். இந்நிலையில் சமந்தாவும் ஆடையில்லாமல் நடிக்க உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமந்தா ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தார். அதில் கணவருக்கு தெரியாமல், கல்லூரி கால காதலனுடன் உடலுறவு வைத்திருப்பது போன்ற கதாபாத்திரத்தில் சமந்தா துணிச்சலுடன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img