தடுப்பூசி, சானிடைசருடன் பிள்ளையார்! ஆர்வத்துடன் கண்ட மக்கள்!

pillayar
pillayar

திருச்சி மன்னார்புரத்தில் கொரோனா தடுப்பூசிகள், மாஸ்க், சானிடைசருடன் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இது பலரையும் கவர்ந்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு கோலங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும். கணினி இயக்குவது, இசையமைப்பது, கிரிக்கெட் விளையாடுவது இசைக் கருவிகள், நவீன கருவிகளை இயக்குவது போன்ற சிலைகளை வைப்பார்கள்.

பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பார்கள். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி இல்லை. வீடுகளில் வழிபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரில் அரசு வழிகாட்டுதல் படி பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதியில்லை. ஆனாலும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாநகர் முழுக்க 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகரில் பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அறநிலையத்துறை மற்றும் போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டன.

அதேநேரத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் 1 – 3 அடி உயரம் வரையிலான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மன்னார்புரம் நடுத்தெருவில் அப்பகுதி இளைஞர்களால் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை பலரையும் கவர்ந்துள்ளது.

மும்பையில் இருந்து கல் வேலைப்பாடுகளுடன் வரவழைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை மன்னார்புரத்தைச் சேர்ந்த சந்துரு மற்றும் நண்பர்கள் ஏற்பாட்டில் வீட்டின் முன்பாக வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சிலையின் ஒரு கையில் கோவாக்சின், மற்றொரு கையில் கோவிஷீல்டு என்று எழுதப்பட்ட சிரஞ்கள் வைக்கப்பட்டுள்ளன. மற்றொரு கையில் கிருமிநாசினி (சானிடைசர்) , மாஸ்க் (முகக் கவசம்) ஆகியவை இடம் பெற்றுள்ளன.

பலரும் விநாயகர் சிலையை ஆர்வமாக பார்த்துச் செல்வதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிலைக்கு தீபாராதனை காட்டி, கொழுக்கட்டை, சுண்டல் உள்ளிட்டவற்றை படைத்து வழங்கி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories