உலக வரலாற்றில் முதல் முறையாக தங்க வடபாவ்!

vadbav
vadbav

இந்தியாவில் வட மாநிலங்களில் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ் வகைகள் கிடைக்கும். அவற்றில் பல தற்போது தென் மாநிலங்களில் பிரபலமடைந்து வருகிறது.

அதில் ஒன்று தான் வட பாவ். பர்கர் போல் இரண்டு பன்களுக்கு இடையே லட்டு போன்ற உருண்டையான ஒரு தீனியை வைத்து சாப்பிடுதுதான் இந்த வட பாவ். தெருக்களில் அதிகமாக விற்பனை செய்யப்படும் இந்த வடா பாவ் மும்பையில் பிரபலமானது.

இந்நிலையில், உலகத்தில் முதன் முறையாக 22 கேரட் தங்க முலாம் மூசப்பட்ட வட பாவ் துபாயில் உருவாக்கப்பட்டுள்ளது. வெண்ணெய் மற்றும் பாலாடைக்கட்டி சேர்க்கப்பட்ட அந்த வடா 22 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட காகிதத்தால் மூடப்படுகிறது.

மேலும் இதில் இனிப்பு உருளைக்கிழங்கு, புதினா மற்றும் எலுமிச்சம்பழம் சேர்க்கப்பட்டுள்ளது. கலீஜ் டைம்ஸ் அறிக்கையின்படி, இதில் சேர்க்கப்பட்டுள்ள வெண்ணெய் பிரான்சிலிருந்து வந்துள்ளது மற்றும் பாவ் வீட்டில் தயாரிக்கப்பட்ட புதினா மயோனைஸ் டிப்பால் மூடப்பட்டிருக்கும்.

இந்த 22 கேரட் தங்க காகிதம் பிரான்சில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த வடா பாவ் விலை ரூ. 2,000 ஆகும். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மஸ்ரத் தாவூத் என்பவர் இந்த வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்திருந்தார். உலகின் முதல் தங்க வடா பாவ் என்ற தலைப்பில் அறிமுகமாகும் இந்த வீடியோவை இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் “வாவ்” என ஆச்சரியப்படும் வகையில் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இந்த வைரல் வீடியோவில் வட பாவ் மரத்தால் செதுக்கப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் 22k தங்க முலாம் பூசப்பட்ட வட பாவ் எப்படி தயார் செய்யப்பட்டது என்பதை விளக்கும் காட்சிகளும் அதில் உள்ளது.

“வட பாவ் இப்போது தங்கத் தரத்தை அனுபவிக்கிறது” என ஒரு யூசர் கமெண்ட் செய்துள்ளார். முன்னதாக துபாயின் ஸ்கூபி கபே (Scoopi cafe) எனும் ஓட்டலில் ‘பிளாக் டைமண்ட்’ என அழைக்கப்படும் வெண்ணிலா ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படுகிறது.

இதன் ஒரு ஸ்கூப் விலை ரூ. 60,000 ஆகும். இந்த ஆடம்பரமான ஐஸ்க்ரீம் விற்பனை செய்யப்படுவதை நடிகையும், ட்ராவல் விலாகருமான(Vlogger) ஷெனாஸ் ட்ரஷரி என்பவர் வெளியிட்டிருந்தார். அதில் வெர்சேஸ் கிண்ணத்தில் இந்த ஐஸ்கிரீம் பரிமாறப்படுகிறது. இது உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம் என்றும் அழைக்கப்படுகிறது.

மேலும், அங்கு சென்று ஐஸ்கிரீம் சாப்பிடுவது தொடர்பான வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், “ஒரு ஐஸ்கிரீமுக்கு 60,000 ரூபாய்!!!! GOLD ஐஸ்கிரீம் சாப்பிடுவது துபாயில் மட்டுமே. உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம்” என்று கேப்ஷன் செய்திருந்தார்.

இதில் 23 கேரட் உண்ணக்கூடிய தங்கம் மடகாஸ்கர் வெண்ணிலா ஐஸ்கிரீமின் மேல் தூவப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துபாயில் ராயல் கோல்ட் பிரியாணி என்ற தங்கம் சேர்க்கப்பட்ட பிரியாணி ஒரு பிளேட் சுமார் ரூ. 19,705.851க்கு விற்கப்படுகிறது. சமீபத்தில் இந்தியாவில் கூட தங்க மூலம் பூசப்பட்ட ஸ்வீட்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories