கனவின் விளைவு: தாய் தந்தை வந்தால்..!

சற்றுமுன் நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
dream-1
dream-1

உங்களை ஆசீர்வாதம் செய்வது போல் கனவு வந்தால் உங்களுக்கு யாரோ துர்போதனை செய்கிறார்கள் என்று அர்த்தம்.

உங்களை பிறர் அலங்கரிப்பது போல் கனவு வந்தால் நண்பர்களால் நம்பிக்கை துரோகத்திற்கு ஆளாக நேரிடும்.

உங்கள் உடம்பில் இருந்து ரத்தம் வருவது போல் கனவு வந்தால் உங்கள் திறமை மற்றவர்களால் அடையாளம் காணப்பட்டு உங்களுக்கு புகழும் தனாலபமும் கிடைக்கப்போகிறது என்று அர்த்தம்.

உங்கள் உடம்பில் காயத்துக்கு கட்டுப்போட்டு இருப்பது போல் கனவு வந்தால் பண விஷயத்தில் மற்றவர்களால் ஏமாற்றப்பட இருக்கிறீர்கள் என்று அர்த்தம் முன் எச்சரிக்கை தேவை.

உங்கள் உருவத்தை கண்ணாடியில் பார்ப்பது போல கனவு கண்டால் விரைவில் உங்களுக்கு திருமணம் நடைபெறப்போகிறது என்பதை குறிக்கிறது.

உங்களை யாரோ அடிப்பது போல் கனவு வந்தால் உங்கள் திறமையை விளங்கி கொள்ளாமல் இருந்த ஒருவர் வலிய வந்து உதவி பண்ணுவார் என்பதை குறிக்கும்.

தந்தையை கனவில் கண்டால் கஷ்டங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும் என்பதை குறிக்கிறது.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

தந்தை இறந்து போனவராக இருந்து அவர் உங்கள் கனவில் வந்தால் உங்களால் தீர்க்க முடியாமல் இருக்கும் ஒரு பிரச்னையை வெற்றிகரமாக முடிப்பீர்கள் என்று அர்த்தம்.

தாய் உயிருடன் இருந்து அவர் உங்கள் கனவில் வந்தால் நீங்கள் முக்கியமான காரியங்களில் அலட்சியமாக நடந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை குறிக்கிறது.

தாய் இறந்து போனவராய் இருந்து அவர் உங்கள் கனவில் வந்தால் உங்கள் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறக்கும் என்பதை குறிக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.