சப்பாத்தி ரொட்டிக்கு.. செம சைட் டிஷ்.‌. இஞ்சி பூண்டு கோங்கூரா உலர்பழ ஊறுகாய்!

Published:

Ginger Garlic Kongura Dried Pickle
Ginger Garlic Kongura Dried Pickle

இஞ்சி பூண்டு கோங்கூரா உலர்பழ ஊறுகாய்

தேவையான பொருட்கள்:
பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
கோங்கூரா (புளிச்ச கீரை) – ஒரு கட்டு, பேரீச்சம்பழம் – 4, உலர்
அத்திப்பழம் – 2 துண்டுகள்,
உலர்திராட்சை – 10,
இஞ்சி விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்,
புளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் – 4,
பொடித்த வெல்லம் – ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு – 20 பல் (தோல் உரிக்கவும்),
கடுகு – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, நல்லெண்ணெய் – 50 மில்லி,
உப்பு – தேவையான அளவு,

செய்முறை:
புளிச்ச கீரையைக் காம்பு ஆய்ந்து இலைகளைச் சுத்தம் செய்து, வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு வதக்கவும். பின்னர் இதை அரைத்துக்கொள்ளவும். பூண்டுப்பல்லையும் சிறிதளவு எண்ணெயில் வதக்கிக்கொள்ளவும். பேரீச்சம்பழம், அத்திபழம், உலர்ந்த திராட்சை, புளி, காய்ந்த மிளகாய் சிறிதளவு தண்ணீர்விட்டு ஊறவைத்து மிக்ஸியில் அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை வாணலியில்விட்டு கடுகு தாளித்து, இஞ்சி விழுது, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் வதக்கி அரைத்த புளிச்ச கீரை விழுது, அரைத்த உலர்பழக்கலவை, வதக்கிய பூண்டுப் பல், வெல்லம், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி கெட்டியாகக் கிளறி இறக்கவும்.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

இந்த ஊறுகாய் சப்பாத்தி, பிரெட்டின் மேல் தடவிச் சாப்பிட வெகு பொருத்தமானது.

Related articles

Recent articles

spot_img