ஆரோக்கிய சமையல்: சிவப்பரிசி குழாய் புட்டு!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
sivaparisi puttu
sivaparisi puttu

சிவப்பரிசி குழல் புட்டு

தேவையான பொருட்கள்:
சிவப்பரிசி புட்டு மாவு – 200 கிராம், நேந்திரம் பழம் – ஒன்று,
தேங்காய் – ஒரு மூடி (துருவிக்கொள்ளவும்), தண்ணீர் – 100 மில்லி,
உப்பு – சிறிதளவு.

செய்முறை:
சிவப்பரிசி புட்டு மாவில் உப்பு சேர்க்கவும். தண்ணீரை லேசாக சூடாக்கி இதில் தெளித்துப் பிசிறிக்கொள்ளவும். (தண்ணீர் அதிகம் விடாமல் தெளித்து, கவனமாகப் பிசிறவும்). பிசிறிய மாவுடன் நேந்திரம் பழத்துண்டுகள், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலந்து புட்டுக் குழலில் அடைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: ஒரு லேயர் புட்டு மாவு ஒரு லேயர் பழத்துண்டு மீண்டும் ஒரு லேயர் மாவு, ஒரு லேயர் தேங்காய்த் துருவல் என்று மாறி மாறி புட்டுக்குழலை நிரப்பலாம். அல்லது எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்தும் நிரப்பியும் வேகவைக்கலாம். இந்தப் புட்டுக்குப் பயறு கறி பொருத்தமாக இருக்கும்.

ALSO READ:  இடதுசாரிகளின் இரட்டை வேடம்: தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.