தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு முதன் முறையாக நாணயம், பணத்தாள், அஞ்சல்தலை சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு…
அக்டோபர் 9 முதல் 15 ஆம் தேதி வரை ஒவ்வொரு ஆண்டும், தேசிய அஞ்சல் வாரமாக கொண்டாடப் படுகிறது. தேசிய அளவில் அஞ்சல் சேவைகளின் பங்கு மற்றும் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அஞ்சல் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது
அஞ்சல் வாரத்தை முன்னிட்டு ஹாபீஸ் அமைப்பு சார்பில் பொது அறிவை தரும் பொழுது போக்கை வலியுறுத்தி பத்து காசுகள் நாணயம் ஒரு ரூபாய் பணத்தால் இருபத்தைந்து காசுகள் யோகா அஞ்சல் தலை கொண்ட 20 ரூபாய் மதிப்பு கொண்ட சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.
முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன் வரவேற்றார். மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் கோவிந்தராஜன் வெளியிட ஹாபீஸ் அமைப்பு நிறுவனர் மதன் அஞ்சல் உறையை பெற்றுக்கொண்டார்.
மகாத்மா காந்தி நூற்றி ஐம்பதாவது ஆண்டு பிறந்த தின நிறைவை முன்னிட்டு மகாத்மா காந்தி அஞ்சல் தலை மற்றும் படங்களை கொண்ட 75 ரூபாய் மதிப்பிலான புத்தக பக்கக் குறி கொண்ட தொகுப்புகள் வெளியிடப் பட்டன. அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் ரகுபதி மற்றும் ராஜேந்திரன் பெற்றுக் கொண்டனர்.
கடந்த நிதி ஆண்டில் திருச்சி அஞ்சல் கோட்டத்தில் சிறப்பாக செயல் புரிந்தோருக்கும் மூத்த வாடிக்கை யாளர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது. வணிக மேலாண்மை இயக்குனர் குணசேகரன் முன்னிலை வகித்தார்.
முதுநிலை அஞ்சல் அதிகாரி அமர்நாத் நன்றி கூறினார். அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் லால்குடி விஜய், முகமது சுபேர்,தாமோதரன், யோகா ஆசிரியர் விஜயகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.