சீதாவாக கங்கனா ரனாவத்!

sita
sita

பன்மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் ‘சீதா அவதாரம்’ திரைப்படத்தில் நாயகியாக நடிக்க கங்கணா ரணாவத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஹ்யூமன் பீயிங் ஸ்டுடியோ தயாரிப்பில், அலாவுகிக் தேசாய் இயக்கத்தில் உருவாகும் படம் ‘சீதா: தி இன்கார்னேஷன்’. இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க, பாலிவுட்டின் பல முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஒருகட்டத்தில் கரீனா கபூர், சீதா கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், இந்தப் படத்தில் நடிக்க அவர் அதிக சம்பளம் கேட்பதாகவும், இதற்குத் தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் பாலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் சீதாவாக கங்கணா ரணவத் நடிக்கிறார் என்பதை படத்தரப்பு உறுதி செய்துள்ளது.

படத்தின் போஸ்டரைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் கங்கணா, “மிகத் திறமையான கலைஞர்கள் கொண்ட இந்தக் குழுவுடன் இணைவதில், பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பதில் மிக்க மகிழ்ச்சி. சீதாராமரின் ஆசீர்வாதங்களுடன். ஜெய் ஸ்ரீராம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் இயக்குநர் அலாவுகிக் தேசாய், கங்கணாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, “சீதா தொடங்குகிறது. நம்பிக்கையுடன் அர்ப்பணிப்பவர்களுக்கு இந்த உலகம் கண்டிப்பாக உதவும்.

கானல் நீராக இருந்த ஒரு விஷயம் தற்போது தெளிவாகியிருக்கிறது. இதுவரை சரியாக ஆராயப்படாத தெய்வீகக் கதாபாத்திரத்தைப் பற்றிய கனவு தற்போது நிஜமாகியிருக்கிறது.

சீதாவாக நடிக்க கங்கணா ரணாவத்தை ஒப்பந்தம் செய்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. எஸ்.எஸ். ஸ்டுடியோவின் முழு ஆதரவுக்கு மிக்க நன்றி” என்றி ட்வீட் செய்துள்ளார்.

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு, ‘பாகுபலி’, ‘மணிகார்னிகா’ உள்ளிட்ட திரைப்படங்களுக்குத் திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதுகிறார்.

கங்கணா நடிப்பில் கடந்த வாரம் ‘தலைவி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்துக்கும் விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories