நாலையும் தேடி நாலாப்பக்கமும் போக வேண்டாம்.. நாற்பதும் ஒரே மரத்தில்..!

fruit tree
fruit tree

சாம் வான் அகேன் அயராத முயற்சியால் ஒரே மரத்தில் 40 வகையான பழங்கள் காய்ப்பதை சாத்தியப்படுத்தியிருக்கிறார்.

அமெரிக்காவின் சைரகஸ் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பேராசிரியராக பணியாற்றிய அவர், தனது பண்ணைத் தோட்டத்தில் விதவிதமான மரங்கள் மற்றும் தாவரங்களை வளர்த்து வருகிறார்.

நியூயார்க் மாகாணத்தில் அவர் வைத்திருக்கும் விவசாயப் பண்ணையில் கிராப்டிங் முறையில் உருவாக்கிய ஒரு மரம், ஒரே நேரத்தில் 40 வகையான பழங்களைக் காய்க்கிறது. அந்த மரத்துக்கு ட்ரீ 40 என்றும் பேராசிரியர் சாம் பெயரிட்டுள்ளார்.

இதற்காக சுமார் 7 ஆண்டுகளாக தீவிர முயற்சியில் ஈடுபட்ட அவர், அதில் வெவ்வேறு விதமான மரங்கள் மற்றும் தண்டுகளை இணைத்து வளர்த்து வந்துள்ளார். அவரின் தொடர் முயற்சியினால் அந்த மரத்தில் தற்போது செரிஸ், பீச்சஸ், பிளம்ஸ், என 40 வகையான பழங்கள் காய்த்துள்ளன.

நம்மூரில் மாம்பழங்களை சுவை மிக்கதாக மாற்றுவதற்கு ‘ஒட்டு மாங்கனி’ என்ற முறை பயன்படுத்தப்படுவதுண்டு. அதில் புளிப்பான மரத்தின் தண்டில், சுவையான மாம்பழத்தின் தண்டை ஒட்ட வைத்து சிறிது நாளில் புளிப்பான மாம்பழத்தை இனிப்பாகவும், அதிகமாகவும் காய்க்க செய்வர்.

அதே போன்றுதான் இவரும் ஒரே மரத்தில் பல்வேறு மரங்களின் தண்டுகளை படிப்படியாக இணைத்தும், சில மாற்றங்களை செய்தும் வளர்த்துள்ளார். பார்ப்பதற்கு மட்டுமின்றி கண்ணை கவரும் வகையில் மிகவும் அழகிய தோற்றத்தை உடையதாகவும் அந்த மரம் உள்ளது.

சிறுவயது முதல் விவசாயத்தில் மீது அதீத ஆர்வம் இருந்து வந்ததாக தெரிவித்துள்ளார். இதனால், விவசாயம் மற்றும் தோட்டக்கலை சார்ந்த படிப்புகளை தேர்தெடுத்து படித்ததாகவும், படித்து முடித்த பிறகு புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

ஒரே மரத்தில் 40 பழங்களை வளர வைக்க முடியும் என்பதில் தனக்கு திடமான நம்பிக்கை இருந்ததாக தெரிவிக்கும் அவர், அறிவியலின் துணைக் கொண்டு அதற்கான முயற்சியை எடுத்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

முதலில் சில தடைகளையும் இடர்பாடுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்ததாக தெரிவித்துள்ள அவர், இதற்காக தொடர்ந்து 7 ஆண்டுகளாக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்ததாக பேராசிரியர் சாம் தெரிவித்துள்ளார்.

ஒரு குழந்தையை கவனித்துக் கொள்வதுபோல் மரத்தை பராமரித்து வந்ததாக கூறியுள்ள சாம், தன்னுடைய முயற்சிக்கு பலன் கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

மழைக்காலங்களில் இந்த மரத்தை பார்ப்பவர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் எனக் கூறிய அவர், வானவில்லை விட அதிக கலர்கள் இந்த மரத்தில் காண முடியும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories