கொலையா செய்தேன்? விசாரணையில் கொந்தளித்த நடிகர்!

navdhip
navdhip

தமிழ் சினிமாவில் அறிந்தும் அறியாமலும் படம் மூலமாக அறிமுகமானார் தான் நடிகர் நவ்தீப். இதனை தொடர்ந்து தமிழில் இளவட்டம், ஏகன், நெஞ்சில் சில் சில், சொல்ல சொல்ல இனிக்கும், அஆஇஈ, இது என்ன மாயம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் இவர் தமிழைவிட தெலுங்கு சினிமாவில் தான் அதிக கவனம் செலுத்தி வந்தார். கிட்டத்தட்ட தெலுங்கில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நவ்தீப் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கு திரை உலகில் போதைப் பொருள் புழக்கம் அதிகம் இருப்பதாக எழுந்த புகாரில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி சுமார் 30 பேரை கைது செய்தனர்.

மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட தெலுங்கு நடிகர் மற்றும் நடிகைகள் நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

அதன்படி நடிகைகள் ரகுல்பிரீத் சிங், சார்மி, தெலுங்கு நடிகர்கள் ராணா, ரவிதேஜா, இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

navthip
navthip

இந்நிலையில் தான் நடிகர் நவ்தீப்புக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. எனவே அவரும் ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜரானார்.

சுமார் இரண்டு மணி நேரம் நடிகர் நவ்தீப்பிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். ஆனால் அதிகாரிகளின் கேள்விகளுக்கு நவ்தீப் சரிவர பதிலளிக்காமல், என்னை ஏன் ஒரு கொலை குற்றவாளி போல் கேள்வி மேல் கேள்வி கேட்கிறீர்கள் என கோபப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனையடுத்து நவ்தீப்பிடம் எழுத்துபூர்வமாக சில கேள்விகளை கொடுத்து அதற்கு பதில் எழுதி அனுப்புமாறு கூறியதுடன், மறு விசாரணைக்கு வரவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

போதைப்பொருள் இதுபோன்று தெலுங்கின் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் சிக்கி வருவது டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories