அட்டகாச சுற்றுலா: சொகுசு கப்பலில் பயணம் செல்ல தயாரா?

ship
ship

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) நிறுவனம் தற்போது சொகுசு கப்பல் சுற்றுலாவுக்கான வசதிகளை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவின் நீர்வழி தடங்களில் சொகுசுக் கப்பலில் சுற்றுலா செல்வதற்கு இனி ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். இதற்காக இந்நிறுவனம் கார்டெலியா குரூயிஸஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

பயணிகள் கப்பல் போக்குவரத்தில் கார்டெலியா குரூயிஸஸ் நிறுவனம் பிரபலமானது. இந்தியாவில் இத்தகைய சொகுசு கப்பலில் பயணிப்பதற்கு முதல் முறையாக ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்துள்ளது.

கொரோனா கால கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்ட பிறகு வழக்கமான முறையில் முன்பதிவுகளை மேற்கொள்ளலாம். உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் இத்தகைய முன்பதிவுகளை மேற்கொள்ள இது வழி ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மிகவும் பிரபலமான சுற்றுலாப் பகுதிகளில் சொகுசுக் கப்பல் பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்தப் பயணிகள் கப்பலில் கோவா,டையூ, கொச்சி, லட்சத் தீவுகள், இலங்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ள வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை – கோவா, மும்பை – டையூ, மும்பை கடல் பகுதி ஆகியவை 2 இரவுகளைக் கொண்ட பயணமாகும். கொச்சி- லட்சத் தீவுகள் பயணமானது 3 இரவுகளைக் கொண்டது. மும்பை, லட்சத் தீவுகள் கடல் பகுதியில் மட்டும் நான்கு இரவுகளைக் கழிப்பதற்கான பயணமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடல் பகுதி பயணத்தில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்களுக்கு கார்டெலியா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. கப்பலிலேயே நீச்சல் குளம், மதுபான பிரிவு, திரையரங்கம், குழந்தைகள் விளையாடும் பகுதி, உடற்பயிற்சி கூடம் ஆகிய வசதிகளை பயணிகள் அனுபவிக்கலாம்.

முதல் கட்டமாக கோவா, டையூ, லட்சத் தீவுகள், கொச்சி மற்றும் இலங்கை வரையிலான கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மும்பையிலிருந்து பயணத்தைத் தொடரலாம்.

அடுத்த ஆண்டு மே மாதம் சென்னையிலிருந்து கப்பல் பயணப் போக்குவரத்து தொடங்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories