கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பால் மன உளைச்சலில் ஆசிரியர்கள்!

school - 2026

சமூக வலைதளத்தில் பரவி வரும் ஆசிரியர்களுக்கு பூஜ்ய இடமாறுதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பாக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜான் வெஸ்லி, தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படாமல் உள்ளது.

தற்போது அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. வரும் நவ.1-ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளி திறக்கப்படும் என்ற அறிவிப்பை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.

மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள பள்ளிகளுக்கு கூடுதல் பணியிடம் ஏற்படுத்தித் தர வேண்டுகிறோம்.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பொதுமாறுதல் கலந்தாய்வை ஆசிரியர்களுக்கு நடத்தவும், தற்போது சமூக வலைதளத்தில் பரவி வரும் ஆசிரியர்களுக்கு பூஜ்ய இடமாறுதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் வேண்டுகிறோம்.

‘ஒரே பள்ளியில் 10 ஆண்டு, 20 ஆண்டு பணியாற்றும் ஆசிரியர்களை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பாக சில கொள்கைகள் வகுக்கப்பட்டு கலந்தாய்வின்போது தெரிவிப்பார்’ என்ற கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்பு ஆசிரியர் மத்தியில் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் நடைமுறையில் உள்ள ஒளிவுமறைவற்ற பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த முதல்வர் ஆணை வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories