ஹூட் ஆப்: இதாங்க விஷயம்!

rajini 1
rajini 1

பரிமாற்றத்துக்கான தளமாக பேஸ்புக், ட்விட்டரும், புகைப்படங்களுக்கான சமூக வலைதளமாக இன்ஸ்டாகிராமும், வீடியோக்களுக்கான தளமாக யூடியூப், டிக் டாக் போன்றவை மக்களிடையே பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த சூழலில்தான் டைப்பிங் செய்து அழுத்துப் போனவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் வகையில் ஆடியோவுக்கான சமூக வலைதளமாக கிளப் ஹவுஸ் அறிமுகம் செய்யப்பட்டது.

இதில் பயனர்கள் குழுமங்களாக இணைந்து உரையாடி வருகின்றனர். கிளப் ஹவுசுக்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனமும் ஸ்பேசஸ் என்ற வசதியை அறிமுகம் செய்தது. இதிலும் பயனாளர்கள் பேசி வருகின்றனர்.

இந்த சூழலில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ஆம்டெக்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஹூட் (HOOTE) என்ற் பெயரில் ஆடியோவுக்கான சமூக வலைதள செயலியை தொடங்கி இருக்கிறார்.

இதனை நடிகர் ரஜினிகாந்த் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். இது தொடர்பான வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து உள்ள ரஜினிகாந்த், குரலை அடிப்படையாக கொண்ட சமூக வலைதளத்தை இந்தியாவில் இருந்து உலக மக்களுக்காக அறிமுகம் செய்வதாக குறிப்பிட்டு உள்ளார்.

இந்த செயலியை அறிமுகம் செய்வதில் பெரு மகிழ்ச்சி அடைவதாகவும், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ‘ஹூட் செயலி மூலம் 60 வினாடி கொண்ட ஆடியோவை பதிவு செய்யவும் பதிவேற்றம் செய்யவும் முடியும். இந்த செயலியின் மூலம் மக்கள் தங்கள் குரல் மூலமாக கருத்துக்களை, யோசனைகளை, விருப்பங்களை தெரிவிக்கலாம். சமூக வலைதளங்களின் எதிர்காலம் குரல் தான் என்பதை உறுதியாக நம்புகிறேன்.’ என குறிப்பிட்டு உள்ளார்.

அதில், “மரியாதைக்குரிய பத்திரிகை நண்பர்களுக்கும், அனைவருக்கும் என்னுடைய அன்பார்ந்த வணக்கங்கள். சௌந்தர்யா விசாகன் உருவாக்கியுள்ள Hoote App-ஐ துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சௌந்தர்யாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இனி எழுதப்படிக்கத் தெரியாதவர்களும், சமூக வலைதளங்கள் மூலமாக மற்றவர்களுக்கு அவர்கள் தெரிவிக்க நினைக்கும் கருத்துக்களை எளிதாக அவர்களுடைய குரலிலேயே பதிவிட்டு தெரிவிக்கலாம்.

இது ஒரு அருமையான செயலி. எதிர்காலத்தில் இந்த இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக் போன்ற வளர்வதற்கு வாழ்த்துகிறேன். வாழ்க மக்கள். வளர்க தமிழ்! ஜெய்ஹிந்த்!” என்று ரஜினிகாந்த் பேசியுள்ளார். இந்த செயலியின் அறிமுக விழாவில், ரஜினிகாந்த் பேசிய இந்த இணைப்பை பகிர்ந்து, இந்த செயலியை சௌந்தர்யா விசாகன் அறிமுகப்படுத்தினார்.

இந்த செயலி குறித்து சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவிக்கையில், ‘எந்த மொழிகளில் வேண்டுமானாலும் பயனர்கள் தங்கள் குரல் வழி கருத்துக்களை பகிர முடியும். மக்களின் கவனிப்பு திறன் குறைந்து வருகிறது. எனவே 60 வினாடிகளுக்குள் தேவையாக தகவலை பேசி அனுப்பும் வசதியை இதில் வழங்கி இருக்கிறோம்.’ எனக்குறிப்பிட்டு உள்ளார்.

ஹூட் செயலியின் சிறப்பம்சங்கள்:

பேசும் ஆடியோவின் பின்னணியில் இசையை சேர்த்து வெளியிடும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

நமது விருப்ப மொழியை தேர்வு செய்து ஆடியோக்களை கேட்கலாம்.

பேஸ்புக் போல் ஆடியோக்களை லைக் செய்யவும், பகிரவும், கருத்திடவும் முடியும்.

குரல் பதிவுகளுடன் புகைப்படத்தையும் இணைக்க முடியும்.

பிரபலங்களை பின் தொடர்ந்து அவர்களின் பதிவுகளை கேட்க முடியும்.

ஆண்டிராய்டு மற்று ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் இந்த ஹூட் செயலி வெளியாகி உள்ளது. ஆண்டிராய்டு ப்ளே ஸ்டோரில் 50 எம்.பி. அளவிலும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் 140.8. எம்.பி. என்ற அளவிலும் ஹூட் செயலி கிடைக்கிறது.

ஆண்டிராய்டில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த செயலியை தரவிறக்கம் செய்துள்ளனர்.

செயலி குறித்து 267 பேர் கருத்திட்டு இருக்கிறார்கள். இதுவரை 5க்கு 4.7 ஸ்டார் ரேட்டிங்குகள் கிடைத்து உள்ளன. ஆப்பிள் ஆப் ஸ்டோரில் 5 ஸ்டார் ரேட்டிங்குகள் கிடைத்துள்ளன.

செயலியில் வழங்கப்பட்டு உள்ள வசதிகள் தனித்துவமானதாகவும், எளிதில் பயன்படுத்தும் வகையில் வடிவமைப்பு இருப்பதாகவும் பெரும்பாலானோர் கருத்திட்டு உள்ளனர்.

அதே நேரம் இதை பயன்படுத்தி வதந்தி, குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்பு கருத்துக்களை தடுக்க என்னென்ன தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டு உள்ளது என்பது குறித்தும், பயனர்களின் தகவல்களை பாதுகாக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories