அடையாள ஆவணம் இருந்தா தான் வாட்ஸ்அப் யூஸ் பண்ண முடியும்..! அதிர்ச்சி தகவல்!

whatsapp
whatsapp

பேஸ்புக் நிறுவனத்தால் நடத்தப்பட்டு வரும் வாட்ஸ் அப் செயலி விரைவில் பயனர்களிடம் அடையாள ஆவணங்களை கேட்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாட்ஸ் செயலியின் v2.21.22.6 என்ற வெர்சனில் பல்வேறு புதிய மாறுதல்கள் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த வெர்சனுடைய பீட்டா வெர்சனை பயன்படுத்தியவர்கள் புதிய மாறுதல்களை கண்டறிந்து இருக்கிறார்கள்.

ஆன்லைன் மூலம் பணப் பரிமாற்றம் செய்ய உதவியும் கூகுள் பே, போன் பே, பேடி எம் போன்ற யு.பி.ஐ. செயலிகளுக்கு போட்டியாக வாட்ஸ் அப் பே என்ற வசதியை கொண்டு வந்தது பேஸ்புக் நிறுவனம்.

ஆனால் அது இந்தியாவில் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. இந்த நிலையில் இதை முழு வீச்சில் அமல்படுத்தி பயனர்களின் நற்பெயரை பெற விரும்பிய பேஸ்புக் நிறுவனம் மற்ற செயலிகளில் இருந்து வாட்ஸ் அப் பேவில் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டு வர உள்ளது.

இதை பயன்படுத்துவதற்காக அடையாள ஆவணங்கள், வங்கிக் கணக்கு ஆவணங்களை வாட்ஸ் அப் நிறுவனம் கட்டாயப்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

தற்போது பயன்பாட்டில் உள்ள வாட்ஸ் அப் பேவில் பயனர்களிடம் மொபைல் எண் மூலம் ஓ.டி.பி. உறுதி பெற்று வங்கிக் கணக்கில் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்படுகிறது.

பிரேசிலில் வாட்ஸ் அப்புக்கு பதிலாக பேஸ்புக் பே என்ற செயலி செயல்பாட்டில் இருந்து வருகிறது. இதை பயன்படுத்துவதற்கும் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு ஓடிபி எண் அனுப்பி உறுதிபடுத்திய பிறகு பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

ஆனால் பேஸ்புக் பேவிலும் வாட்ஸ் அப் பே போல் பல்வேறு மாறுதல்கள் கொண்டு வரப்படலாம் என தொழில்நுட்ப ஆய்வாளர்கள் கணித்து உள்ளனர்.

ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி கூகுள் பே, போன்பே, பே டிஎம் போன்ற மொபைல் பரிவர்த்தனை செயலிகள் KYC மூலம் உறுதிபடுத்திய பிறகு பண பரிவர்த்தனை மேற்கொள்ளவும், வங்கிக் கணக்கை கையாளவும் அனுமதிக்கின்றன.

இதற்கு ஒரு படி மேல் சென்று வாட்ஸ் அப் பே-ஐ பயன்படுத்த தனி நபர் விபரங்களை பேஸ்புக் கோர உள்ளதாக கூறப்படுகிறது.

சாதாரண வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தும் மக்களுக்கு இதில் விலக்கு அளித்தாலும், வாட்ஸ் அப் பிஸினஸ் செயலியை பயன்படுத்துபவர்கள் அடையாள ஆவணங்களை சமர்பிப்பது கட்டாயமாக்கப்படும் என தொழில்நுட்ப வட்டார்ங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இது குறித்து பேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்கள் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த தகவல்களும் வரவில்லை.

வாட்ஸ் அப்பின் புதிய வெர்சனை அறிமுகம் செய்துவிட்டு இந்த அறிவிப்பை பேஸ்புக் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories