பாடல் வரிகளால் ஓவியம்.. சாதனை படைத்த கேரளப் பெண்!

suriya
suriya

391 பாடல் வரிகளைக் கொண்டு ஏ.ஆர்.ரஹ்மானின் ஓவியத்தை வரைந்து கேரளப் பெண் சாதனை படைத்துள்ளார்.

கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் சதீஷ் சந்திரன். தனியார் கல்லூரியில் பயிற்சியாளராக இருக்கிறார். இவரது மனைவி சூர்யா.

இவர்களுக்குத் திருமணமாகி இரண்டு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்ட சூர்யா, திருமணத்துக்குப் பிறகு நீண்ட நாட்களாக ஓவியம் வரையாமல் இருந்து வந்தார். சிறு வயதிலிருந்தே கலையின் மீது பற்று கொண்டவள் ஆனால் இன்னும் வரையக் கற்றுக்கொள்ளவில்லை. போட்டிகளில் தானாக முன்வந்து கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றுள்ளார். பின்னர், மேற்படிப்பு மீதான ஆர்வத்தை விட்டுவிட்டு தாவரவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இந்நிலையில் சமீபத்தில் ஓவியம் வரைதலை மீண்டும் தொடங்கிய சூர்யா புதுமையாக ஒன்றைச் செய்யவேண்டும் என்று எண்ணியுள்ளார். இதனைத் தொடர்ந்து தனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானின் ஓவியத்தை அவர் இசையமைத்த பாடல் வரிகளைக் கொண்டு வரைய முடிவு செய்துள்ளார்.

அதன்படி ‘ரோஜா’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் முதன்முதலில் இசையமைத்த ‘சின்ன சின்ன ஆசை’ பாடல் தொடங்கி, பிரபலமான 391 பாடல்களின் வரிகளைக் கொண்டு ஏ.ஆர்.ரஹ்மானின் ஓவியத்தை வரைந்துள்ளார். ‘பம்பாய்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணாளனே’ பாடல் வரிகளைக் கொண்டு கண்களை வரைந்துள்ளார்.

suriya 2
suriya 2

சுமார் 76 மீட்டர் நீளமும், 56 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஓவியத்தை முழுமையாக வரைந்து முடிக்க சூர்யா எடுத்துக் கொண்ட நேரம் வெறும் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மட்டுமே.

இந்த ஓவியத்தைப் படம்பிடித்த சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானையும் டேக் செய்திருந்தார். அது பலராலும் பகிரப்பட்டு இணையத்தில் பெரும் வைரலானது.

தற்போது இந்த ஓவியம் இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் சூர்யாவுக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தச் செய்தியைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories