nathiya - 2026

தென்னிந்திய சினிமாவில் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்த நதியா, ஏறக்குறைய முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.

நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நதியா, சினிமாவில் பிஸியாக இருந்த போதே திருமணம் செய்து கொண்டு, சினிமாவில் இருந்து விலகியிருந்தார் .

இதன்பிறகு பல ஆண்டுகளுக்கு பிறகு 2004 ம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுத்தார் நதியா.

அதைத் தொடர்ந்து பட வாய்ப்புக்கள் வந்ததால் , மும்பை குடும்பத்துடன் குடியேறினார் . இப்போது பாக்சிங், ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வது போன்றவை அடங்கிய வீடியோ ஒன்றை நதியா பதிவிட்டுள்ளார்.

இதில் வெறித்தனமாக நதியாக ஒர்க் அவுட் செய்யும் இந்த வீடியோ பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இதற்கு ஏகப்பட்ட லைக்குகள் கிடைத்து வருகின்றது . அவரின் இளம் வயது போட்டோக்களும் வைரலாகிறது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending