
ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்க அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது.
இந்நிலையில், நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஜம்முவிலும் கிருஷ்ண ஜெயந்தியை மக்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்து கடவுள்களின் குறிப்பாக ஸ்ரீகிருஷ்ணரின் வேடம் அணிந்த சிறுவர், சிறுமியர் நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜன்மாஷ்டமி விழாவினை முன்னிட்டு, ஜம்முவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப் படுத்தப் பட்டிருந்தன.

ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி அன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்ரீ கிருஷ்ண ஊர்வலம் தொடர்பாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஊர்வலம் செல்லும் வழியில் முஸ்தாதியில் இருந்து போலீசார், சிஆர்பிஎஃப் மற்றும் சிஐஎஸ்எஃப் பணியாளர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். அப்போது, ஐ.ஜி.பி ஜம்மு- முகேஷ் சிங், எஸ்.எஸ்.பி ஜம்மு- தேஜேந்திர சிங், டி.சி ஜம்மு – சுஷ்மா சவுகான் ஆகியோர் ஊர்வல பாதுகாப்புடன் மற்ற ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தனர்.



