தடுப்பூசி போட சாமியாடிய மூதாட்டி! வைரல்

corona injection - 2026

100 சதவீத கொரோனா தடுப்பு ஊசி போடுவதற்கு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது புதுச்சேரி அரசு.

தடுப்பூசி செலுத்தாதவர்களின் வீடுகளுக்கே சென்று சுகாதார ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

கொரோனா ஊசியா தாங்காது என கையெடுத்து கும்பிடும் வயதான தம்பதியினர் செய்த சேட்டை சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

இந்நிலையில், புதுச்சேரியில் மேட்டுப்பாளையம், தன்வந்தி நகர் பகுதியில் வீடு வீடாக சென்று சுகாதாரத்துறை ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அங்கு வசிப்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துச் சொல்லி, தடுப்பூசி போடுவதற்கு ஊக்கமளித்தனர்.

அப்போது, அப்பகுதியில் உள்ள குடிசை வீட்டில் வசித்து வரும் வயதான தம்பதியினரிடம் சுகாதாரத் துறை ஊழியராக பணியாற்றும் வேல்விழி என்னும் பெண், தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி கூறினார். அதற்கு அந்த பாட்டி செய்யும் அலப்பறை வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

அப்போது, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு அச்சப்பட்ட அந்த வயதான தம்பதியினர் கொரோனா ஊசி (Corona Vaccine) போட்டுக் கொள்ள மாட்டோம் என்று அடம் பிடித்தனர். சுகாதார ஊழியர் வற்புறுத்தியதால், அந்த பாட்டி, சாமி வந்தது போல் ஆடினார். அதைப் பார்த்து ஆடிப்போன சுகாதார ஊழியர் என்ன செய்வது என்று திகைத்துப் போய் நின்றார்.

புதுச்சேரி முதலமைச்சரின் பெயரைச் சொல்லி, ரங்கசாமிக்கு தெரியும் என்று கூறி சாமியாடிய பெண்ணை மேலும் சமாளிக்க முடியாது என்று நினைத்து சுகாதார ஊழியர்கள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறினார்கள்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வீடியோவை பார்க்கும், பலரும் பலவிதமாக பதிலிட்டு நையாண்டி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தின் மகளாக கேட்டுக் கொள்கிறேன் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பி துரை மகள் திருமணத்தில் கலந்துக் கொண்ட பிறகு செய்தியாளர்களை தமிழிசை சவுந்தர்ராஜன் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், புதிய வகை ஒமைக்ரான் கொரோனா தொற்றில் (Omicron Varrient) இருந்து காப்பாற்றிக்கொள்ள தடுப்பூசி போட்டு கொள்வது மிக அவசியம் என்றும், முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியைப் உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் தடுப்பூசியே போடாதவர்கள் உடனடியாக முதல் தவணை தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories