முதுமலை: கூட்டமாய் சுற்றி வரும் காட்டு யானைகள்! மக்கள் பீதி!

elephant 1 - 2026

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன .

வட கிழக்கு பருவ மழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது . மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாத காலமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது .

இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி உள்ளதோடு , வனப்பகுதிகள் முழுவதும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது . முதுமலை புலிகள் காப்பக பகுதி புலி , காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது .

தமிழ்நாடு , கேரளா , கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது . இந்நிலையில் கேரளா , கர்நாடகா ஆகிய மாநில வனப் பகுதியில் இருந்து யானை உட்பட வன விலங்குகள் உணவு தேடி இடம் பெயர்ந்து முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளன .

காட்டு யானைகள் வலசை செல்லும் காலம் என்பதாலும் , அதிகளவிலான யானைகள் முதுமலை புலிகள் காப்பகத்தின் வழியாக இடம் பெயர்ந்து செல்கின்றன .

elephants - 2026

இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி – கூடலூர் சாலையில் இரு குட்டிகளுடன் 7 காட்டு யானைகள் சாலைக்கு வந்தது .

சாலையில் யானை கூட்டம் வாகனங்கள் வருவதை பொருட்படுத்தாமல் , கூட்டமாக ஒய்யாரமாக நடந்து சென்றது .

இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை பின்னோக்கி இயக்கிச் சென்றனர் . சிறிது தூரம் சாலையில் சென்ற யானை கூட்டம் பின்பு வனப் பகுதிக்குள் மீண்டும் சென்றது .

இருப்பினும் பெண் ஒற்றை யானை ஒன்று சாலையில் நின்று கொண்டிருந்த போது , அப்போது இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் எதிர்பாராத விதமாக யானையின் அருகே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது . இருப்பினும் அந்த யானை அந்த இருசக்கர வாகன ஓட்டிகளை எவ்வித இடையூறும் செய்யாமல் வனப் பகுதிக்குள் சென்றது .

யானைகள் கூட்டமாக உலா வரும் காட்சிகளை வாகன ஓட்டிகள் செல்போனில் பதிவு செய்து வெளியிட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது .

இந்நிலையில் கூட்டம் கூட்டமாக காட்டு யானைகள் சாலையோரங்களில் உலா வருவதால் , வாகன ஓட்டிகள் யானைகளுக்கு எவ்வித இடையூறும் செய்யாமல் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories