
வலசை போதல் என்பது பறவைகள், விலங்குகள் ஆகியவை பருவகாலங்களை ஒட்டி புலம் பெயருவதைக் குறிக்கும்.
எல்லா விலங்குகளும் பறவைகளும் வெப்பநிலை வேறுபாட்டை உள்ளூர் உணர்கின்றன. மேலும் மனிதனைப் போலவே, விலங்கினங்கள் கோடைக்காலத்தைக் குளிர்ந்த இடங்களிலும், குளிர்காலத்தை வெதுவெதுப்பான இடங்களிலும் கழிக்க விரைகின்றன.
அவை தங்கள் வாழிடத்தைப் பல்வேறு பருவகாலங்களில் மாற்றிக் கொள்கின்றன. குறிப்பிட்ட காலங்களில் விலங்குகள் அல்லது பறவைகள் தங்களின் வாழிடத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக இடப்பெயர்வு செய்வது வலசை போதல் எனப்படும்.
அவை குழுக்களாகச் செல்லும் போது அவற்றைக் கொன்று தின்னும் உயிரிகளிடமிருந்து பாதுகாக்கப்படுகின்றன. வலசை போகும் பறவைகள், பூமியின் காந்தவிசையில் ஏற்படும் மாற்றங்களை உணர்கின்றன. அதன் உதவியுடன் அவை தங்களது சேருமிடத்தைக் கண்டறிகின்றன.
இது பறவைகள் புலப்பெயர்வு எனப்படுகின்றது. இவ்வாறு புலம்பெயரும் பறவைகள் இதற்காகப் பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றன. ஒவ்வொரு வருடமும் பகல் பொழுது குறையும் காலங்களில் உணவு கிடைப்பதும் குறைகிறது.
அப்போது பல பறவைகள் வெதுவெதுப்பான நல்ல சாதகமான தட்ப வெப்பநிலையை நோக்கி நீண்ட தூரம் பறந்து செல்லத் தம்மைத் தயார்படுத்திக் கொள்கின்றன.
இடப்பெயர்ச்சி தொடங்குவதற்கு பல நாட்களுக்கு முன்னதாகவே பறவைகள் பயணத்திற்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்கின்றன. அதிக உணவை உண்டு, கூடுதலாக ஓர் அடுக்கு கொழுப்பை உடலில் சேர்த்துக் கொள்கின்றன.
சில பறவைகள் கூட்டமாக எப்படி அணிவகுத்துச் செல்வது என்று ஒத்திகைகள் கூடப்பார்க்கின்றன. பிறகு, ஒருநாள் ஆழமான மூதாதைப் பண்புகளின் தூண்டலால் உந்தப்பட்டு முன்பின் அறியாத இடங்களுக்கு செல்லத் துவங்குகின்றன.
வட பிரதேசக் கோடை காலத்தின் நீண்ட பகற்காலம், புதிதாகப் பொரித்த குஞ்சுகளுக்கு உணவு ஊட்டுவதற்கான அதிக வாய்ப்புக்களைக் கொண்டது. இக்காலத்தில் இப்பகுதிகளில் உணவும் கூடுதலாகக் கிடைக்கும்.
இலையுதிர் காலத்தில் பகற்காலம் சுருங்கி, உணவு கிடைப்பதும் அரிதாகும்போது பறவைகள் வெப்பப் பகுதிகளுக்கு வருகின்றன. இப் பகுதிகளில் பருவகாலங்களைப் பொறுத்து, உணவு கிடைப்பதில் அதிக மாற்றம் இருப்பதில்லை.
இவ்வாறு புலம்பெயர்வதால் கிடைக்கும் நன்மைகள், களைப்பு, சக்திச் செலவு, புலப்பெயர்வின் போது ஏற்படும் ஆபத்துக்கள் என்பன போன்ற பாதக அம்சங்களை ஈடு செய்யக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
புலப்பெயர்வுக்கு முந்திய காலப்பகுதியில், பல பறவைகளில் அதிகரித்த செயற்பாடுகள் அல்லது புலப்பெயர்வு அமைதியின்மை காணப்படுகின்றது. அத்துடன் அதிகரித்த கொழுப்புப் படிதல் போன்ற உடற்கூற்றியல் மாற்றங்களும் ஏற்படுகின்றன.
அத்துடன் இயற்கையாகப் புலம்பெயரும் பறவைகளிடம் நிகழும் பறப்புத் திசை மாற்றமும் ஏறத்தாழ அதே காலத்திலேயே கூண்டுப் பறவைகளிலும் நிகழ்வதும் அறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் வரும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்லணை கால்வாய், வெண்ணாறு, வடவாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி, கொள்ளிடம் ஆற்றுப்பகுதிகளில் லட்சக்கணக்கான நீர் காகங்கள் வந்து செல்வது வழக்கமாக கொண்டுள்ளது.
இப்பறவைகள், அதிகாலையிலேயே ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர் காகங்கள், கூட்டம் கூட்டமாக பறந்து வந்து தண்ணீரில் நீந்தியும், முழ்கி இரைகள் திண்கின்றது. இதே போல் சுமார் 10 க்கும் மேற்பட்ட நீர் காகங்கள் கூட்டமாக வந்து செல்கின்றன. அப்பறவைகள் வரும் போது, சாலைகளே இருட்டான ஒரு நிலை ஏற்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டு குறிப்பிட்ட மாதத்தில் வருவதால், அவைகள் இனப்பெருக்கத்திற்காக வருவதாக கூறப்படுகிறது. மீண்டும் மார்கழி மாதம் இறுதியில் நீர் காகங்கள் சென்று விடுகிறது. இதனை பார்ப்பதற்காக ஆற்றுப்பாலம் பகுதியில் குழந்தைகள் முதல் முதியவர்கள் நின்று ரசிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வருடந்தோறும் பறவைகளின் வரத்து அதிகரித்து வருவதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் அவைகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதோடு, தென்பெரம்பூர் போன்ற பகுதிகளில் சரணலாயம் அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்பறவைகளில் நுாற்றுக்கும் மேற்பட்டவைகள் கூட்டமாக செல்லும் போது, ஒரு நீர் காகம் மட்டும் முன்னே செல்லும், அதன் பின்னால் முக்கோண வடிவில் மற்ற நீர் காகங்கள் செல்லும், சிறிது துாரம் பறந்தவுடன், பின்னால் வரும் நீர் காகம் முன்னே செல்லும், அதனை மற்ற நீர் காகங்கள் தொடர்ந்து செல்லும்.
நீர் காகங்களில் மூத்த நீர் காகங்கள் வழிகாட்டும், அதனை பின்தொடரும். சிறிது துாரத்திற்கு பிறகு மற்றொரு மூத்த நீர் காகம், முன்னே வரும். இந்த நிகழ்வு, மூத்த வயதுடையோரை பின் பற்றி தொடர்ந்தால், வாழ்க்கை நலமாக இருக்கும் என்பதற்கு எடுத்துகாட்டு என முதியவர்கள் தெரிவிக்கின்றனர்.