மக்கள் விரும்பும் அம்சங்களுடன் ட்ரியோ ஆட்டோ! ஸ்ரீதர் வேம்பு ட்விட்!

auto - 2026

இன்றைய சூழலில் நாடு முழுவதும் மின் வாகனப்பயன்பாட்டிற்கு மாறிவரும் நிலையில், அதற்கேற்றால் பல வடிவங்களில் வாகனங்களை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்துவருகின்றனர்.

கார், இருசக்கர வாகனம் என்ற வரிசையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக மகேந்திர நிறுவனம் ட்ரியோ என்ற மின்சார ஆட்டோவை அறிமுகம் செய்தது.

லித்தியம் அயர்ன் பாட்டரி உதவியுடன் மின்சக்தியில் இயங்கும் இந்த ட்ரியோ வகை ஆட்டோ, பொருளாதார ரீதியாகவும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்ற நீடித்த தன்மைக் கொண்டதாக உள்ளதால் மக்கள் அதிகளவில் இந்த ஆட்டோவை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர் எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் ‘சிறந்த தொழிலதிபரும், கோடீஸ்வரனுமான ஸ்ரீதர் வேம்பு தனது டிவிட்டர் பக்கத்தில், ட்ரியோ ஆட்டோ குறித்த தகவல்களை பதிவிட்டுள்ளார்.

அதில், தற்போது மகேந்திரா நிறுவனம் தீவிர மேம்படுத்தப்பட்ட ட்ரியோ ஆட்டோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது எனவும், மணிக்கு 55 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த மின்சார ஆட்டோவை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 125 கிமீ வரை பயணம் செய்யமுடியும்.

மேலும் அனைவருக்கும் சிறந்த பயணத்தை வழங்குவதால் இந்த ஆட்டோவை நான் ஓட்ட விரும்புகிறேன் எனவும் ஆனால் என்னிடம் சில பரிந்துரைகள் உள்ளதாகவும் ஒரு பதிவிட்டுள்ளார்.

இதன்படி, மற்றொரு டிவிட்டர் பதிவில், இந்த எலக்ட்ரிக் ஆட்டோ பார்ம் பேக்டர் மற்றும் மலிவு விலையில் அதவாது ரூ. 3.5 லட்சத்திற்கு கிடைக்கின்றது.

மேலும் குடும்பத்தினர் அனைவரும் பயணிக்கும் வகையில் இதன் வடிவமைப்பு மாற்றும் போதும், குறைவான விலைக்கு கிடைக்கும் போது மக்களிடம் இன்னமும் அதிக வரவேற்பு கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதோடு நான் பல்வேறு கிராமப்பகுதி சாலைகளில் ஆட்டோவை ஓட்டிச்செல்லும் போது இது எங்கே கிடைக்கும் என மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்.

எனவே குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என அனைவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு எலக்ட்ரிக் ஆட்டோவில் பல விதமான வடிவமைப்புகளையும், வண்ணங்களையும் வழங்க வேண்டும் என மகேந்திரா நிறுவனத்திற்கு பரிந்துரைத்துள்ளார்.

மேலும் இந்த குறைந்த விலை வாகனத்தைப் பிரபலப்படுத்த சிறந்த சந்தைப்படுத்துதல் பிரச்சாரத்துடன் மக்களை அணுகினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என ஸ்ரீதர் வேம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நானும் இந்த வாகனத்தை ஓட்ட விரும்புகிறேன் எனவும் கூறியுள்ளார்.

குறிப்பாக தனித்தன்மையான ஸ்டைல், சிறந்த செயல்திறன் கொண்ட ட்ரியோ ஆட்டோ மூலம் ஆண்டுக்கு ரூ. 45 ஆயிரம் வரை சேமிக்க முடியும். இதில் D+3, D+4, D+5 இருக்கை வசதிகள் உள்ளது. இதில் லித்தியம் அயர்ன் பாட்டரி 1.5 லட்சம் கிமீ வரை ஓடும் ஆற்றல் கொண்டது. ஆட்டோக்களில் பெரிய வீல்பேஸ் இருப்பதால், விசாலமான கேபின் கொண்டதாக இந்த ஆட்டோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுப்போன்று பல்வேறு மக்களுக்குத்தேவையான அனைத்து அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளது.

இவரின் இந்தப்பதிவைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துக்களைப்பதிவிட்டுவருவதோடு, மறு பதிவிட்டும் வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories