வைகுண்ட ஏகாதசி.. நாளை விடுமுறை: திருச்சி ஆட்சியர்!

srirangam-paramapatha-vasal
srirangam-paramapatha-vasal

நாளை, டிசம்பர் மாதம் 14ம் தேதி திருச்சி மாவட்டம் முழுவதுமாக உள்ளூர் விடுமுறை அறிவித்து திருச்சி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். இது பூலோக வைகுண்டம் என வைணவ பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

இந்த வருடம் ஏகாதசி டிசம்பர் 14ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திருச்சி மாவட்டம் முழுவதும் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார்.

இந்துக்கள் பண்டிகையில் வைகுண்ட ஏகாதேசி மிகவும் புனிதமான பண்டிகையாக பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் தமிழகத்தின் அனைத்து வைணவ ஆலயங்களிலும் சொர்க்க வாசல் திறப்பு வைபவம் நடைபெறும்.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் திறப்பு உற்சவம் மிகவும் விமர்சையாக நடைபெறும். எனவே, அன்றைய தினம் ரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வந்து போவார்கள். இதை முன்னிட்டு அன்றைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,’திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நாளை, டிசம்பர் 14ம் தேதி வைகுண்ட ஏகாதசி பெருந் திருவிழாவை முன்னிட்டு, அன்றைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறை திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் பொருந்தும்.

அதேசமயம், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு டிசம்பர் 18 ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories