திருவாதிரை திருநாள்: சிதம்பரத்தில் தேரோட்டம்!

chidhambaram radham - 2026

மார்கழி திருவாதிரையை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

நான்கு மாட வீதிகளிலும் ஆடி அசைந்து வந்த திருத்தேரின் அழகை பல்லாயிரக்கணக்கானவர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா அபிஷேகம் நாளை அதிகாலையிலும் பிற்பகலில் ஆருத்ரா தரிசன காட்சி நடைபெறும்.

சிவபெருமானின் பஞ்சபூதத்தலங்களில் ஆகாயத்தலமாக போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழிமாத ஆருத்ர தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினமும் வெவ்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகளின் எழுந்தருளி அருள்பாலித்தனர்.

இந்த திருவிழா குறித்து ஏற்கனவே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கொடியேற்றம், ஆருத்ரா தரிசன விழா உள்ளிட்டவற்றில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டது. மேலும் தேரோட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.

சிதம்பரத்தில் தேரோட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. நேற்றிரவு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தில்லையில் தேரோட்டம் நடக்காவிட்டால் ஆளும் மன்னனுக்கு கேடு வரும் என்று கூறி பேட்டியளித்தார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா. போராட்டம் நடத்தியாவது தேரோட்டத்திற்கு அனுமதி பெற வேண்டும் என்றும் கூறினார் ஹெச் ராஜா. நேற்றிரவு ஏராளமான சிவனடியார்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி குறைந்த அளவிலான பக்தர்களுடன் தேரோட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேரோட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து விடிய விடிய வேலைகள் நடைபெற்றன. இன்று அதிகாலையில் திருத்தேரில் இறைவன் நடராஜர் எழுந்தருளினார்.

பிள்ளையார், முருக பெருமான், நடராஜர் தேர் உள்ளிட்ட ஐந்து தேர்களும் நான்கு ரத வீதிகள் வழியாக பக்தர்களால் வடம் பிடித்து இழுத்துச்செல்லப்பட்டது.

இன்று பிற்பகல் வரை தேரோட்டம் நடைபெறும். திருத்தேரில் மூலவர் நடராஜர் காட்சி தருவார் என்பதால் புகைப்படங்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories