கவிழ்ந்து கிடந்த ஆமை.. திருப்பிப் போட்ட எருமை!

Buffalo - 2026

விலங்குகளிடையே இருக்கும் ஒரு குணாதிசயம் என்னவென்றால், தனது குழுவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு உதவும் மனப்பான்மை அவற்றிற்கு இருக்கும்.

அதுவே, அவை மற்ற இனத்தை சேர்ந்த விலங்குகளுக்கு உதவுவதை பார்க்கும் போது மனதை கவரும் விதமாக இருக்கும். அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் வீடியோவில், எருமை ஒன்று ஆமைக்கு உதவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோ கிளிப் இப்போது பல்வேறு சமூக ஊடக தளங்களில் பலரால் மீண்டும் பகிரப்பட்டு வருகிறது.

இந்த வீடியோவை IFS அதிகாரி சுசாந்தா நந்தா தனது டி விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் அந்த வீடியோவுடன், “எல்லோரும் அன்பாக நடந்துகொள்ளலாம்… எருமை ஆமையைத் திருப்பிவிட்டு காப்பாற்றியது போல” என்று கேப்ஷனில் குறிப்பிட்டிருந்தார்.

பத்தே வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், மரத்தின் அருகே நின்றுகொண்டிருந்த எருமை, எதையோ கீழே குனிந்து தனது கொம்புகளால் தள்ள முயல்வதைக் காணலாம்.

அதனை உன்னிப்பாகப் கவனித்தால், எருமை ஒன்று அதன் கொம்பைப் பயன்படுத்தி தலைகீழாக கவிழ்ந்தபடி தத்தளித்த ஆமையை புரட்டி விடுவதைக் காணலாம்.

ஆரம்பத்தில் ஆமையை புரட்டுப்போடுவதில் மாடு தோல்வியடைந்தாலும், அது வெற்றிபெறும் வரை மீண்டும் மீண்டும் முயற்சித்தது. ஆனால் ஆமை எப்படி கவிழ்ந்து கிடந்தது என்பது தெரியவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு பகிரப்பட்ட இந்த வீடியோ 66,000க்கும் அதிகமான வியூஸ்களையும், லைக்குகளை குவித்துள்ளது. மேலும் இந்த வீடியோவுக்கு டன் கணக்கில் பல கருத்துகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories