
நாயும், சிங்கமும் ஒன்றுடன் ஒன்று நட்பு பாராட்டி விளையாண்டு மகிழ்வதை நாம் பார்த்திருக்க மாட்டோம். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள விலங்குகளின் இந்த பாசப்பிணைப்பு வீடியோ பார்ப்பவர்களை சிலிர்க்க செய்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் doglovers என்கிற பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், அடர்நிற நாய் ஒன்றும், வெளிர்நிற சிங்கம் ஒன்றும் உற்சாகமாக ஒன்றோடு ஒன்று விளையாடுகிறது.
இவை இரண்டுமே ஒன்றாக வளர்க்கப்பட்டவை, அதன் காரணமாக இரு விலங்குகளும் ஒன்றோடு ஒன்று நட்பு பாராட்ட ஆரம்பித்துவிட்டது.
அவர்களுக்குள் ஒரு கட்டுக்கடங்காத அளவில் பாச பிணைப்பு உள்ளது. இந்த வீடியோ மூலம் கரடுமுரடாக இருக்கும் விலங்குகளுக்குள், எவ்வளவு மென்மைத்தன்மை இருக்கிறது என்பதை உணர முடிகிறது.
மேலும் இந்த வீடியோவை பதிவிட்டவர், அதற்கு பொருத்தமான கேப்ஷன் ஒன்றையும் பதிவிட்டுள்ளார், அதில், இது ஆச்சர்யமான ஒரு பாச பிணைப்பு, இருவரும் ஒன்றாகவே வளர்ந்தார்கள், இப்பொது இருவரும் நல்ல நண்பர்களாக மாறிவிட்டார்கள்” என்று பதிவிட்டுள்ளார்கள்.
இந்த வீடியோ இதுவரை 45 லட்சம் பார்வைகளை கடந்ததோடு மட்டுமில்லாமல், பல எமோஜிகளையும், லைக்குகளையும் வாரி குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/p/CYQ4cc0lUFw/?utm_source=ig_embed&utm_campaign=loading