வங்கி வாடிக்கையாளர் சேவை எண்ணை கூகுளில் தேடிய நபர்! ரூ.4.02 லட்சம் இழந்த பரிதாபம்!

bank - 2026

எஸ்பிஐயின் வாடிக்கையாளர் சேவை எண்ணை கூகுளில் தேடியதில், நவி மும்பையில் வசிக்கும் 73 வயது முதியவர், சைபர் மோசடி செய்பவர் விரித்த வலையில் சிக்கி ரூ.4.02 லட்சத்தை இழந்துள்ளார்.

புகார்தாரரான ஓய்வூதியம் பெறும் முதியவர், தனது டெபிட் கார்டை செயல்படுத்த, அதாவது ஆக்டிவேட் செய்ய விரும்பி, இணைய மோசடியில் சிக்கி பணத்தை இழந்துள்ளார்.

ஜனவரி 10 ஆம் தேதி கார்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்த முதியவர், அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரிந்து வந்ததாகவும், 1998 இல் இந்தியா திரும்பியதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

டிசம்பர் 25 அன்று, அந்த முதியவர் எஸ்பிஐயின் வாடிக்கையாளர் சேவை எண்ணை கூகுளில் தேடும்போது, ‘எஸ்பிஐ டெபிட் கார்டு உதவி’ என குறியிடப்பட்ட எண் உள்ள பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

முதியவர் அந்த எண்ணிற்கு அழைத்த பிறகு, தன்னை எஸ்பிஐயில் இருந்து மணீஷ் குப்தா என்று அறிமுகப்படுத்திக் கொண்ட மோசடி செய்பவர், அவரது தொலைபேசியின் ரிமோட் அணுகலைப் பெற AnyDesk பயன்பாட்டைப் பதிவிறக்கி நிறுவுமாறு வழிகாட்டியுள்ளார்.

முதியவர் அவ்வாறு அந்த பயன்பாட்டை தனது மொபைலில் நிறுவியதும், மோசடி செய்பவர் அந்த முதியவரின் வங்கிக் கணக்கின் விவரங்களைக் கண்டறிந்து, அவற்றைப் பயன்படுத்தி பல பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் ரூ.4.02 லட்சத்தை மாற்றியுள்ளார்.

மேலும், மோசடி செய்பவர், சர்வர் மெதுவாக இருப்பதால், டிசம்பர் 27, திங்கட்கிழமை வங்கிக்குச் சென்று டெபிட் கார்டு ஆக்டிவேட் செயல்முறையை முடிக்குமாறு அந்த முதியவரிடம் கூறியுள்ளார்.

பின்னர், புகார்தாரரான முதியவர் வங்கிக்கு சென்றபோது, ​​அவரது கணக்கில் இருந்து பெரும் தொகை எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து முதியவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories