ஓட்டுநருக்கு திடீரென ஏற்பட்ட வலிப்பு.. பேருந்தை ஓட்டி பயணிகளை காத்த பெண்!

lokitha - 2026

நாள்தோறும் ஏதாவது ஒரு செய்தி, வீடியோ வைரலாகி வருவது வழக்கமாகிவிட்டது. சில வீடியோக்கள் மனதை உலுக்கும் வகையில் இருந்தாலும், சில வீடியோக்கள் மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடும்.

சில செய்திகள், நம்பிக்கையை தரும். அந்த வரிசையில், குழந்தைகள், பெண்களை ஏற்றிக்கொண்டு பேருந்தை இயக்கிய ஓட்டுனருக்கு திடீரென் வலிப்பு ஏற்படவே, பெண் பயணி ஒருவர் பேருந்தை இயக்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் உள்ள வேளான் சுற்றுலா மையத்திற்கு சுற்றுலா சென்றிருந்த குழு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

குழந்தைகளும், பெண்களும் அடங்கிய அந்த குழு சென்ற பேருந்தை ஆண் ஓட்டுனர் ஒருவர் இயக்கியுள்ளார். சுற்றுலா முடிந்து திரும்பி கொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டிருக்கிறது.

வலிப்பு ஏற்பட்டதால், கை கால்களை இயக்க முடியாமல் அவதிப்பட்டிருக்கிறார். அப்போது கூட்டத்தில் இருந்த 42 வயது பெண் பயணி ஒருவர், சமயோசிதமாக செயல்பட்டு பேருந்தை இயக்குவதாக உறுதி அளித்திருக்கிறார்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

யோகிதா சாதவ் என்ற அந்த பெண், சிக்கலில் இருந்த குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் ஆறுதல் தந்து கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தூரம் பேருந்தை இயக்கி வந்துள்ளார்.

பேருந்தில் இருந்த பயணிகளை காப்பாற்றியது மட்டுமின்றி, தக்க நேரத்தில் பேருந்து ஓட்டுனரை மருத்துவமனையில் அனுமதிக்கவும் காரணமாகி இருக்கிறார்.

தனக்கு கார் ஓட்ட தெரிந்ததால், பேருந்தை ஓட்ட சம்மதித்ததாகவும், பேருந்து ஓட்டுனருக்கு சிகிச்சை அளிப்பதும், குழந்தைகள் மற்றும் பெண்களை காப்பாற்றுவதும் முக்கிய பணி என்பதை உணர்ந்ததாலும், தான் பேருந்தை இயக்கியதாக சொல்கிறார் யோகிதா.

இக்கட்டான சூழலில், தைரியமாக பேருந்தை இயக்க வந்த யோகிதாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. கூடவே இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories