எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள்: மத்திய அரசு புதிய அறிவிப்பு!

Charging centers - 2026

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழல் மாசு அடைவதைத் தவிர்க்க இந்த வாகனங்கள் ஊக்குவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் எலக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் தீர்ந்துபோனால், அதனை மீண்டும் சார்ஜ் செய்ய ஏதுவாக மத்திய அரசு புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டிருக்கிறது.

இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

2020ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த 2021ம் ஆண்டு எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை 240 சதவிகிதம் அதிகரிக்கிறது.

2021 டிசம்பர் மாதம் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. உத்திரப்பிரதேசத்தில் மட்டும் 23% எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளது.

மொத்த விற்பனையில் மகாராஷ்டிரா 13%, கர்நாடகா 9%, ராஜஸ்தான் 8%, டெல்லி 7%, தமிழ்நாடு 7% என்ற அளவில் பங்கு வகிக்கின்றன.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜிங் மையங்கள் அமைக்க பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு. தனிநபரோ அல்லது நிறுவனங்களோ இந்த சார்ஜிங் மையங்களை எங்கு வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் இதற்கு எந்த உரிமமும் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது. மத்திய அரசு இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் செயல்படவிருக்கிறது.

இந்தத் திட்டம் வருவாய் பகிர்வு அடிப்படையில் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுதும் விரைவில் இதுபோன்ற சார்ஜிங் மையங்கள் திறக்கப்படும்.

நகர எல்லையில் மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு சார்ஜிங் மையமும், நெடுஞ்சாலைகளில் 25 கிலோ மீட்டருக்கு ஒரு சார்ஜிங் மையமும் அமைக்கப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இதனை செயல்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு உள்ளது.

இதையடுத்து மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையம் சார்பில் எலக்ட்ரிக் வாகனம், சார்ஜிங் ஸ்டேஷன் பயிற்சி அனைத்து மாநிலங்களிலும் நடக்கிறது.

இதில் எலக்ட்ரிக் சைக்கிள், எலக்ட்ரிக் டூவீலர், கார் தொழில்நுட்பம்,சார்ஜிங் ஸ்டேஷன் அமைப்பது, ஸ்டேஷன் மாடல்கள், அரசு சட்ட திட்டங்கள் குறித்து கற்றுத்தரப்படுகிறது.

இது பொதுமக்களுக்கும் பயன்படும், மேலும் எலக்ட்ரிக் வாகனம் பயன்படுத்தும் பலரும் இந்த சார்ஜிங் மையங்களால் பயன் அடைவார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories