மதுரையைச் சுற்றி… ஒரு கிரைம் ரவுண்ட் அப்!

crime scene - 2026

உத்தங்குடியில் நிதி நிறுவனத்தில் புகுந்து திருட்டுமர்ம ஆசாமி கைவரிசை:

மதுரை உத்தங்குடியில், நிதி நிறுவனத்தில் புகுந்து திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.உத்தங்குடி ஜே.சி.பி.காலனியை சேர்ந்தவர் ராமலிங்கம் 62.இவர், நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.சம்பவத்தன்று, இவரது நிறுவனத்தில் புகுந்த மர்ம நபர் அங்கு இருந்த பணம் ரூபாய் முப்பதாயிரத்தை திருடிச்சென்றுவிட்டனர்.இந்த திருட்டு குறித்து, உரிமையாளர் ராமலிங்கம் கொடுத்த புகாரில், கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டு ஆசாமியை தேடிவருகின்றனர்‌.

கே.புதூரில்ஐ.டி.ஐ.மாணவி தற்கொலை:

மதுரைபுதூரில், ஐ.டி.ஐ.மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.கே.புதூர் கணபதிசேர்வை தெருவை சேர்ந்தவர் முருகேசன்.இவரது  மகள் கிருத்திகா 18.இவர் புதூர் ஐ.டி.ஐ.யில், பியூட்டிசன் கோர்ஸ் படித்து வந்தார்.இந்நிலையில், அவருக்கு வேலைக்கு செல்வதில் ஆர்வம் ஏற்பட்டது.படிப்பை முடித்துவிட்டு, வேலைக்குசெல்லலாம் என பெற்றோர் கூறியுள்ளனர்.இதனால், மனமுடைந்த கிருத்திகா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை  செய்து கொண்டார்.இந்த சம்பவம் குறித்து, புதூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

குடிப்பழக்கத்தை குடும்பத்தினர் கண்டித்ததால் மனமுடைந்த முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை:

 மதுரை பி. பி.குளம் முல்லை நகரை சேர்ந்தவர் வீரப்பன் 60. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. தினமும் குடித்து கொண்டிருந்தார். இதை வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அவரது பழக்கத்தை மாற்றிக் கொள்ளும்படி கண்டித்துள்ளனர். இதனால், மனமுடைந்த வீரப்பன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து, தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனா பாதிக்கப்பட்ட முதியவர் மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு: 

கொரோனா நோயால், பாதிக்கப்பட்ட முதியவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது உயிரிழந்தார். சிம்மக்கல் பஜனை மடத் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் 69.இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சோதனை செய்ததில்,  கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதனால், அவரை மதுரை அரசு மருத்துவமனையில்  கொரோனாவார்டில் சேர்த்து சிகிச்சை அளித்தனர் .இந்த நிலையில், சிகிச்சை பலன் இல்லாமல் முதியவர் ராதாகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, மனைவி வசந்தா கொடுத்த புகாரின் பேரில் ,திலகர்திடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிக்க பணம் தர மனைவி மறுப்பு கணவர் தூக்கு போட்டு தற்கொலை: 

மதுரை  காமராஜர் சாலை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ராஜகுரு 45. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது தினமும், குடித்து விட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டுள்ளார் .அதற்கு மனைவி மறுத்து விட்டார். இதனால் ,மனம் உடைந்த ராஜகுரு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ,திடீர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் கால் முறிவு மனமுடைந்தகணவர் தூக்கு போட்டு தற்கொலை: 

திருநகர் சீனிவாச நகர் மெயின் வீதியை சேர்ந்தவர் ராஜா பிரகாஷ் 45. இவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு காலில் முறிவு ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மன அழுத்தத்துடன் இருந்து வந்த ராஜகுரு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து, மனைவி முத்துமாரி கொடுத்த புகாரின் பேரில், திரு நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நண்பனின் மரணம் மன உளைச்சலில் வாலிபர் தற்கொலை:

மதுரை, சுப்பிரமணியபுரம் ஹரிஜன் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் மகன் திருப்பதி 27. இவரது நண்பர் திடீரென்று இறந்துவிட்டார். இதனால், திருப்பதி மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில், துக்கம் தாளாமல் வீட்டில் தூக்குப்போட்டு  திருப்பதிதற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து, திருப்பதியின் மனைவி தமிழ்ச்செல்வி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories