KitKat கவரில் ஜெகன்னாதர் புகைப்படம்! வலுத்த கண்டனம்.. நீக்கி மன்னிப்பு கேட்ட நிறுவனம்!

KitKat - 2026

கிட்கேட் சாக்லேட் ரேப்பர்களில் (KItkat) ஜெகன்நாதர், பாலபத்ரா மற்றும் மாதா சுபத்ரா ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.

இது மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர்.

நெஸ்லே இந்தியாவின் பிரபல தயாரிப்புகளில் ஒன்று தான் கிட்கேட் ( (KItkat). பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த சாக்லேட்களைத் தயாரிக்கும் நிறுவனம்

ஒவ்வொரு சாக்லேட் தயாரிக்கும் நிறுவனமும் தங்களின் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களைத் தன் பக்கும் ஈர்க்கும் விதமாக பல்வேறு விளம்பர யுக்திகளை கையாள்வர்கள்.

குறிப்பாக கலர்புல்லான விளம்பரங்கள், கலர்புல்லான சாக்லேட் கவர்கள் மற்றும் அதில் இடம் பெற்றிருக்கும் வாசகங்கள்தான் முக்கிய பங்காற்றும்.

இப்படி ஒரு புதுவிதமான விளம்பர யுக்திகளை கையாண்டதன் விளைவு தான் தற்போது நெஸ்லே இந்தியா சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக இருப்பதோடு, இந்துக்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது.

கிட்கேட் ராப்பரில் பலரது மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் ஜெகன்நாதர், பாலபத்ரா மற்றும் மாதா சுபத்ரா ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.

நாம் மிகவும் மதிக்கப்படும் எந்த தெய்வங்களின் புகைப்படங்களாக இருந்தால் இதனை சாக்லேட் ராப்பரில் பயன்படுத்தக்கூடாது .

ஏனென்றால் என்ன தான் விலையுயர்ந்த சாக்லேட்டுகளை நாம் வாங்கி சாப்பிட்டாலும், சாக்லேட்கள் தீர்ந்ததும் சாக்லேட் கவர்களை சாலை அல்லது குப்பைத்தொட்டிகளில் போட்டுவிடுவோம்.

இதனால் நம் தெய்வங்களை மக்கள் தெரியாமல் மிதித்து செல்லும் நிலை ஏற்படும் என்பதால் இதனை உடனே அகற்றும்படி சோசியல் மீடியாவில் கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர். இதுவே மற்ற மதக் கடவுளை இழிவுபடுத்தும் தைரியம் யாருக்கும் இல்லை அவர்கள் தலையை வாங்கி விடுவார்கள் என பயம் இருந்திருக்கும். இந்துக்கள் பொறுமையாக இருப்பதால்தான் தொடர்ந்து இந்துக்களையும் இந்துக் கடவுளர்களையும் கோயில்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகின்றன.

மற்றொரு பயனர், உடனடியாக சாக்கேட் கவரில் உள்ள பகவான் ஜெகன்நாத், பாலபத்ரா மற்றும் மாதா சுபத்ரா போன்றவற்றின் புகைப்படங்களை அகற்றிடுங்கள் என்று கூறியுள்ளார். இல்லாவிடில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.

இந்நிலையில் கண்டக்குரல் வலுக்கவே நெஸ்லே நிறுவனம் டிவிட்டரில், நாங்கள் யார் மனதையும் புண்படுத்தவில்லை எனவும், கலைஞர்களின் திறமையை வெளிக்கொணரவே இதுப்போன்று புகைப்படங்களை சாக்லேட் கவர்களில் பயன்படுத்தியதாகவும் பதிவிட்டுள்ளனர்.

மேலும் கடந்த ஆண்டு ஒடிசாவின் முக்கிய பண்டிகைக்கு குறித்து ரேப்பர் வெளியிட்டதாகவும், மக்கள் எதிர்த்த நிலையில் திரும்பப்பெற்றதாகவும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories