இன்ஸ்டாகிராம்: சப்ஸ்கிர்ப்ஷன் புதிய அப்டேட்..!

Instagram - 2026

சமூகவலைதளங்களில் படங்களை பகிர்வதற்கு ஃபேஸ்புக் தளத்திற்கு அடுத்து மிகவும் முக்கியமான தளம் என்றால் அது இன்ஸ்டாகிராம் தான்

இந்த தளத்தில் பிரபலங்கள், பொது மக்கள் என அனைவரும் தங்களுடைய படங்களை பதிவிட்டு நண்பர்களிடம் இருந்து லைக்ஸ் பெற்று வருகின்றனர்.

அத்துடன் டிக் டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டா ரீல்ஸ்தான் பயனர்களிடம் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது.

இதனால் அவ்வப்போது இன்ஸ்டா செயலியில் ஒரு சில புதிய வசதிகளை அந்நிறுவனம் கொண்டு வந்து பயனர்களுக்கு சர்ப்ரைஸ் தருகிறது.

அந்த வரிசையில், யூட்யூப் சானலில் உள்ள சப்ஸ்கிர்ப்ஷன் ஆப்ஷனைப் போல இனி இன்ஸ்டாகிராமிலும், சப்ஸ்கிரிப்ஷன் ஆப்ஷன் வர உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இதற்கான சோதனை முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. இந்த அப்டேட் மூலம், ஃபாலோவர்ஸ் அவர்களுக்கு பிடித்த பிரபலங்களை, பார்க்க விரும்பும் கண்டெண்ட் பக்கங்களை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளலாம்.

வீடியோ கண்டெண்ட் தயாரிப்பவர்களும், சப்ஸ்கிரைப்பர்களுக்கென தனி பிரத்யேக வீடியோ அல்லது புகைப்பட கண்டெண்ட் அடங்கிய பதிவுகளை பதிவேற்றலாம்.

இந்த சப்ஸ்கிரிப்ஷன் வசதி மூலம், இனி இன்ஸ்டாவில் வீடியோ / ரீல்ஸ் பதிவேற்றம் செய்பவர்களுக்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் என இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

யூட்யூபை போல, இனி இன்ஸ்டாகிராமிலும் பணம் சம்பாதிக்கலாம் என்பதுதான் இந்த லேட்டஸ்ட் அப்டேட்டின் ஒரு வரி விளக்கம்.

தொடக்கமாக, அமெரிக்காவில் இந்த அப்டேட் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கூடிய விரைவில், இந்தியாவுக்கு இந்த அப்டேட் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி “Subscriptions are for creators,” எனும் தலைப்புடன் வீடியோ ஒன்றை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

“சப்ஸ்கிரிப்ஷன்ஸ் மூலம் கிரியேட்டர்கள் தங்களின் நலம் விரும்பிகளுக்கு பிரத்யேக அனுபவம் வழங்கி அவர்களுடன் நெருக்கமாகலாம். சப்ஸ்கிரைபர் லைவ், சப்ஸ்கிரைபர் ஸ்டோரீஸ், சப்ஸ்கிரைபர் பேட்ஜஸ் என பலவிதங்களில் நலம்விரும்புகளுக்கு பிரத்யேக பதிவுகளை வழங்கலாம்,” என அவர் தனது பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

adam - 2026

வரும் மாதங்களில் இந்த சேவை படிப்படியாக அதிகரிக்கப்படும். முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட சில கிரியேட்டர்களுக்கு அமெரிக்காவில் மட்டும் இந்த அம்சம் வழங்கப்பட இருக்கிறது. தேர்வு செய்யப்படும் கிரியேட்டர்கள் சப்ஸ்கிரிப்ஷன்களை விற்று பிரத்யேக தரவுகளை வழங்கலாம்.

“இன்ஸ்டாகிராமின் ஒட்டுமொத்த அனுபவங்களுடன் சப்ஸ்கிரிப்ஷன்கள் ஒருங்கிணைக்கப்படுவதால், காலப்போக்கில் இதுபோன்ற அம்சங்களை நீட்டிக்க திட்டமிட்டுள்ளோம்,” என மொசெரி தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories