thiyagarajar 1 - 2026

திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 175ஆம் ஆண்டு ஆராதனை விழா!

சற்றுமுன் அடடே... அப்படியா? தமிழகம்
thiyagarajar 1 - 2026

திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 175ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று நடைபெற்றது.

வழக்கமாக ஐந்து நாட்கள் ஆராதனை விழா நடைபெறும் நிலையில், கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஒரு நாள் மட்டும் விழா நடைபெறுகிறது.

விழாவையொட்டி, அதிகாலையிலேயே தியாகராஜர் சுவாமி வாழ்ந்த இடத்திலிருந்து, உஞ்ச விருத்தி பஜனை புறப்பட்டது. மேளதாளங்கள் முழங்க, திருமஞ்சன வீதி, தெற்கு வீதி வழியாக சந்நிதியை சென்றடைந்தது.

பின்னர், நாதஸ்வர மங்கல இசையுடன் தொடங்கி, பஞ்சரத்ன கீர்த்தனை வைபவம் நடைபெற்றதுது. இதில் ஹரிகதா கலைஞர் விசாகா ஹரி, பாடகி மஹதி, அம்ருதா போன்றோர் கலந்து கொண்டனர். விழா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடைப்பெற்றது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.