ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற நபர்.. தவறி விழுந்தவரை காப்பாற்றிய காவலர்கள்!

train 3 - 2026

ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றபோது தண்டவாளத்தில் விழ முயன்ற பயணியை மின்னல் வேகத்தில் செயல்பட்டு உயிரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை காவலர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

வடமாநிலத்தை சேந்தவர் அசோக் தாஸ் (32). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறை கிடைக்கும் நாட்களில் இவர் சொந்த ஊருக்கு சென்று விட்டு திரும்பி வருவது வழக்கம்.

சில நாட்களுக்கு முன்பு விடுமுறை எடுத்து விட்டு சொந்த ஊருக்கு சென்று இருந்தார் அசோக் தாஸ். விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்புவதற்காக நேற்று முன்தினம் செகந்திராபாத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்து ஈரோட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

நேற்று இந்த ரயில் ஈரோடு ரயில் நிலையத்துக்கு வந்தது. ஆனால் அசோக் தாஸ் அயர்ந்து தூங்கி கொண்டிருந்ததால் ரயில் ஈரோடு வந்தது அவருக்கு தெரியவில்லை.

அவர் வந்த ரயிலும் சிறிது நேரம் நின்று விட்டு திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்டது. திடீரென கண்விழித்த அசோக் தாஸ் ரயில் ஈரோடு ரயில் நிலையத்தை விட்டு மெதுவாக செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் பதறிப்போன அவர் பேக்கை எடுத்துக் கொண்டு ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே விழும் நிலையில் தடுமாறினார்.

அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த தலைமைக் காவலர்கள் பழனிசாமி மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் இதனை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.

மின்னல் வேகத்தில் செயல்பட்ட காவலர்கள் இருவரும் தண்டவாளத்தில் உள்ளே விழ இருந்த அசோக் தாசை பிடித்து இழுத்து காப்பாற்றினர்கள்.

‘ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றால் இதுதான் நிலைமை’ என்று அசோக் தாஸுக்கு அறிவுரை கொடுத்து அனுப்பி வைத்தனர். ஒரு நிமிடத்தில் மின்னல் வேகத்தில் செயல்பட்டதால் பயணியின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

இந்த காவலர்கள் பயணியை காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. துரிதமாக செயல்பட்டு பயணியை காப்பாற்றிய காவலர்களை காவல் துறை அதிகாரிகள், பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories