train - 2026

தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை: தெற்கு இரயில்வே!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
train - 2026

சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க தடுப்பூசி செலுத்திய சான்றிதழை சமர்ப்பிக்க அவசியமில்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் தற்போது கொரோனா நோய்த் தொற்றல் வேகமாக பரவி வருகிறது.

அதனையடுத்து ரயில்வே நிர்வாகம், மின்சார ரயிலில் பயணிக்க இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் காண்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும், ரயில் பயணிக்கும் போது வழக்கம்போல மாஸ்க் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.