
ஒரு புலி காட்டுப் பன்றியுடன் சண்டையிடுகிறது. மரங்களுக்கு இடையே நடைபெறும் இந்த போராட்டத்தில் இரையை விடக்கூடாது என புலியும், புலியிடம் தப்பித்துவிட வேண்டும் என பன்றியும் போராடுகின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ரந்தம்பூர் தேசிய பூங்காவில் புகைப்படக் கலைஞர் எம்.டி. பராஷர் என்பவர் இந்த வீடியோவை எடுத்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை காலை எடுக்கப்பட்ட சுமார் 20 வினாடிகள் நீடிக்கும்,
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
வீடியோவில், புலியானது பன்றியின் கழுத்தை இறுகப்பிடித்து அதனை தப்பவிடாமல் இருப்பதற்கான அனைத்து தாக்குதல்களையும் தொடுக்கிறது.
பன்றியும் உருமிறியவாறு புலியின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறது. கடைசியில் புலிக்கு பன்றி இரையானதாக கூறப்படுகிறது.
This video will show you the strength of a Tiger & a wildboar… T-39 aka Noor iconic Tigress of RTR
— WildLense® Eco Foundation 🇮🇳 (@WildLense_India) January 25, 2022
VC – Surendra Couhan.@ParveenKaswan @Saket_Badola @SudhaRamenIFS @rameshpandeyifs @susantananda3 @buitengebieden_ @ErikSolheim pic.twitter.com/YHC4kexdiH