அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை அதன் தீபமன்றோ.. நெகிழ வைக்கும் பாசவீடியோ!

bro sis bond - 2026

சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

சகோதர சகோதரி உறவு மிகவும் இனிமையான ஒரு உறவாகும். தனது தங்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என அண்ணன் ஆசைப்படுவது வழக்கம்.

அண்ணன் இருக்கும் தங்கைகள் அண்ணன்களை தங்கள் அப்பாவாகவே கருதுகிறார்கள். இந்த வைரல் வீடியோவும் அப்படிப்பட்ட ஒரு அதிர்ஷ்டக்கார தங்கை பற்றியதுதான்.

இந்த வீடியோவில், பெண்ணின் அண்ணன்கள், அவரது மணநாளில், அவர் மேல் அன்பு மழை பொழிவதைக் காண முடிகின்றது.

இந்திய திருமணங்களில் பல வகைகள் உள்ளன. இந்தியாவின் சில பகுதிகளில், திருமணங்களில் அண்ணன் தங்கையை கையைப் பிடித்து அழைத்து வருகிறார்.

சில இடங்களில் அண்ணன் மணப்பெண்ணை தோளில் சுமந்து வருவது வழக்கம். எனினும், அனைத்து வகைகளும் ‘நீ திருமணம் ஆகி சென்றாலும், நான் உன்னுடன் என்றும் இருப்பேன்’ என அண்ணன் தங்கைக்கு அளிக்கும் வாக்குறுதியே மேலோங்கி இருக்கிறது.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இந்த வீடியோவில் நாம் காண்பது சற்று வித்தியாசமாக உள்ளது. இதில் ஒரு திருமணத்தில் வித்தியாசமான பாரம்பரியம் காணப்படுகிறது.

இங்கு மணமகளின் (Bride Video) சகோதரரகள் தங்கள் சகோதரியை மணமேடைக்கு வரவேற்கும் விதத்தை பார்த்தால், கண் கலங்குகிறது. இந்த வீடியோவைப் பார்த்து பல நெட்டிசன்களால் தங்கள் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லையாம்!!

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் ‘witty_wedding’ என்ற பயனர் வெளியிட்டார். இந்த வீடியோ 8,100க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. துவக்கத்தில், அழகான சிவப்பு நிற லெஹங்காவில் மணமகள் திருமண மண்டபத்துக்குள் நுழையத் தயாராக இருப்பதை காண முடிகின்றது.

மணமகன் காத்திருக்கும் மேடை வரை மணமகள் நடக்க மலர் இதழ்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவருடைய சகோதரர்கள் பாதையில் மண்டியிட்டு அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது.

மணமகள் நடக்கத் துவங்கியவுடன், அவரது சகோதரர்கள், மலர் இதழ் பட்டும் அவர் பாதம் பாதிக்கப்படக் கூடாது என தங்கள் கைகளால் பாதத்தை தாங்குகிறார்கள்.

மணமகள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் ஒவ்வொரு சகோதரர் தன் கைகளால் தாங்கிக்கொள்கிறார். இது காண்பவர்களை கண் கலங்க வைக்கிறது.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

மணப்பெண்ணின் சகோதரர்களின் இந்த இனிமையான சைகையை இணையவாசிகள் (Netizens) விரும்பி பார்த்து வருகின்றனர்.

குறிப்பாக பாசம் மிக்க அண்ணன், தங்கைகள் இந்த வீடியோவை அதிகம் பார்த்து வருகிறார்கள். இப்படிப்பட்ட அண்ணன்கள் கிடைக்க அந்த பெண் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories