December 6, 2025, 4:09 PM
29.4 C
Chennai

ஷாலினி பெயரில் ட்விட்டர்! அஜித் மனேஜர் பதிவிட்ட தகவலால் பரபரப்பு!

ajith shalini 1 - 2025

அஜித் – ஷாலினி தம்பதியின் ரொமாண்டிக் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி தாறுமாறாக வைரலானது.

தமிழ் சினிமாவில் திரையிலும் சரி, நிஜத்திலும் சரி மீண்டும், மீண்டும் ரசிக்கத் தோன்றும் டாப் ஜோடிகளில் தல அஜித் – ஷாலினி தம்பதிக்கு எப்போது தனி இடம் உண்டு.

அஜித் ரசிகர்களைப் பொறுத்தவரை அவர் மீது எவ்வளவு அன்பும், மரியாதையும் வைத்துள்ளார்களோ அதே அளவிற்கு ஷாலினி மீதும் மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளனர்.

சரண் இயக்கத்தில் அஜித் – ஷாலினி நடித்த அமர்களம் படத்தின் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பெற்றோர்களும் காதலுக்கு பச்சைக்கொடி காட்ட, அமர்களம் படம் வெளியான அடுத்த ஆண்டே, 2002ல் அஜித், ஷாலினி திருமணம் செம்ம கிராண்டாக நடந்தது.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து முற்றிலும் விலகிய ஷாலினி சிறந்த குடும்பத் தலைவியாகவும், அனோஷ்கா, ஆத்விக்கிற்கு சிறந்த அம்மாவாகவும் தன்னுடைய கடமையை தொடர்ந்து வருகிறார்.

தன்னுடைய குடும்பத்தின் மீது கேமரா வெளிச்சம் படுவதில் அஜித்துக்கு விருப்பம் இல்லை என்றாலும், அவர்களுடைய குடும்ப புகைப்படம், அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாவது உண்டு.

ajith - 2025

அந்த வகையில். தற்போது அஜித் – ஷாலினி தம்பதியின் ரொமாண்டிக் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலானது.

அதில் கருப்பு நிற ஸ்லீவ் லெஸ் லாங் கவுன் அணிந்துள்ள ஷாலினி, தனது கணவர் அஜித்துடன் சேர்ந்து கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படம் நடிகை ஷாலினி பெயரில் ட்விட்டரில் கணக்கு துவங்கப்பட்டு அதில் பகிரப்பட்டிருந்தது.

அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி பெயரில் டுவிட்டர் கணக்கு ஒன்று நேற்று தொடங்கப்பட்டுள்ளது. Shalini Ajith Kumar என்ற பெயர் கொண்ட அந்த டுவிட்டர் பக்கத்தில் அஜித், ஷாலினி ஜோடியாக எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, “டுவிட்டரில் இணைந்தது மகிழ்ச்சி. முதல் டுவிட்டே எனது அன்பு கணவருடன்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

ரசிகர்கள் பலரும் அந்தப் பக்கத்தை பின்தொடரத் துவங்கினர். யாஷிகா உள்ளிட்ட பிரபலங்களும் அவரை வரவேற்று பதிவிடத் தொடங்கினர்.

ajith shalini - 2025

இந்த நிலையில், நடிகர் அஜித்தின் மேலாளரும், பிரபல மக்கள் தொடர்பாளருமான சுரேஷ் சந்திரா இது போலியான பக்கம் எனவும், நடிகை ஷாலினிக்கென ட்விட்டர் பக்கம் இல்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.

இது போலி கணக்காக தான் இருக்கும் என ரசிகர்கள் கணித்து வந்த நிலையில், நடிகை யாஷிகா, ஷாலினி பெயரில் உள்ள டுவிட்டை ரீ-டுவிட் செய்து, வெல்கம் மேம் என பதிவிட்டார். இதனால் அஜித் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர்.

யாஷிகாவின் பதிவுக்கு பின்னர் இந்த விவகாரம் பேசுபொருள் ஆனதால், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா, ஷாலினி பெயரில் இருப்பது போலி டுவிட்டர் கணக்கு தான் என்பதை உறுதி செய்தார்.

கிராஸ் வெரிபிகேஷன் கூட செய்யாமல், போலி டுவிட்டர் கணக்கை வரவேற்கும் விதமாக டுவிட் செய்த நடிகை யாஷிகாவை அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

சிலர், ‘போதையில் ரீ-டுவிட் செய்துவிட்டாயா’ என்றெல்லாம் கிண்டலடித்து வருகின்றனர். இதனால் யாஷிகா கடும் அப்செட்டில் உள்ளாராம்.

நடிகர் அஜித்தும், நடிகையும் ஷாலினியும் எந்த சமூக வலைதளபக்கத்திலும் இல்லை. இருவரும் பொது நிகழ்வுகளில் அரிதாகவே கலந்துகொள்கின்றனர்.

என்னை ரசிகர்கள் திரையில் பார்த்தால் போதும் என்ற கொள்கையுடன் இருக்கிறார் நடிகர் அஜித்.

கடைசியாக தல என்றோ, வேறு பட்டப்பெயர்கள் கொண்டோ அழைக்காதீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இருவரும் புகழ் வெளிச்சத்தை விரும்பாதவர்களாகவே இருந்து வருகின்றனர்.

கடைசியாக நடிகை ஷாலினி தனது சகோதரர் ரிச்சர்டு ரிஷியின் ருத்ர தாண்டவம் படத்தைக் காண திரையரங்கு வந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Related Articles

Popular Categories