December 6, 2025, 4:32 PM
29.4 C
Chennai

பூமியின் கலைப்படைப்பு! ஆச்சர்யத்தை வெளியிட்ட விண்வெளி வீரர்!

space - 2025

ஜெர்மன் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் விண்வெளி வீரர் மத்தியாஸ் மவுரர், விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட அரேபிய தீபகற்பத்தின் சிறந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் விண்வெளி வீரர் தனது டுவிட்டர் கணக்கில் அற்புதமான பிரகாசமான வண்ணங்கள் நிறைந்த ஓவியம் போன்ற வடிவங்களை கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

மேலும் அந்த டுவிட்டில் “மேலிருந்து பார்த்தால், நமது பூமி ஒரு உண்மையான கலைப் படைப்பாக தெரிகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

வண்ணக் கலைஞர் தனது ஆழ்ந்த சிந்தனையில் ஒவ்வொன்றாக உற்றுநோக்கி வரைந்தால் வரைப்படம் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது அவர் சமூகவலைதளங்கள் பகிர்ந்த புகைப்படம்.

மேலும் அந்த படங்களை சுட்டிக்காட்டிய அவர், ஒரு கட்டத்தில் தன்னைத்தானே கேட்டுக் கொண்டேன் “பாலைவனத்தில் இந்த வடிவங்களும் கோடுகளும் என்னவென்று, இது ஆச்சரியமாக இருக்கிறது” என பகிர்ந்து கொண்டார்.

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இதேபோன்ற ஒரு புகைப்படத்தை ஆகஸ்ட் 2021 மாத தொடக்கத்தில், பிரெஞ்சு விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கெட் சர்வதேச விண்வெளி நிலையித்தில் இருந்து எடுக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார்.

இது பலரால் விரும்பப்பட்டது என்றே கூறலாம். காரணம் விண்வெளி மைய பயணத்தின் சுற்றுப்பாதையில் இருந்து நட்சத்திரங்கள் வானத்தில் ஒளிரும் காட்சியை பகிர்ந்து கொண்டார். அதில் இரண்டு படங்களை பகிர்ந்தார். அதில் ஒன்றின் வலது பக்க மூலையில் ஒரு செயற்கைக்கோளை காட்டுகிறது.

மற்றொரு புகைப்படம் திகைப்பூட்டும் வெயிலை பிரதிபலிக்கும் காட்சியாக இருக்கிறது. இந்த புகைப்படங்களும் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் வகையில் இருந்தது.

விண்வெளியில், பூமிக்கு மேலே பூமியைச் சுற்றிக்கொண்டே இருக்கும் ஒரு ஆய்வு நிலையம் சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station) ஆகும். இதனை நாம் நமது வெறும் கண்ணில்கூட பார்க்கலாம்.

இந்த நிலையத்தை 1998ஆம் ஆண்டு விண்வெளியில் கட்டத் தொடங்கினர். இந்த நிலையத்தின் நீளம் 239 அடி, அகலம் 356 அடி, உயரம் 66 அடி ஆகும்.

இதன் பொருள் திணிவு 4,50,000 கிலோ. இது பூமியை நீள் வட்டப்பாதையில் மணிக்குச் சராசரியாக 27600 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது. பூமியிலிருந்து 278 முதல் 460 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வருகிறது. ஒருமுறை பூமியைச் சுற்றி வர 91 நிமிடங்கள் ஆகின்றன.

தினமும் இந்த நிலையம் பூமியை 15.7 முறை சுற்றி வருகிறது. இந்த நிலையத்தில் தங்கும் விண்வெளி வீரர்கள் தினமும் 16 சூரியன் உதயத்தையும், மறைதலையும் காண்கின்றனர்.

இந்த நிலையத்திற்கு ஆய்வு செய்வதற்காக 2000ஆம் ஆண்டுமுதல் வீரர்கள் சென்று தங்கி வருகின்றனர். இதுவரை 15 நாடுகளுக்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்கள் அங்குச் சென்று ஆய்வுகளை நடத்தி விட்டுத் திரும்பி வந்துள்ளனர். நிரந்தரமாக அதில் வீரர்கள் உள்ளனர்.

இந்த விண்வெளி நிலையம் பூமியின் ஈர்ப்பு ஆற்றலின் காரணமாக மாதம் 2 கிலோ மீட்டர் பூமியை நோக்கி இறங்குகிறது. அதனை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்தி விடுகின்றனர். இது ஒரு தொடர் நடவடிக்கையாக உள்ளது.

விண்வெளியில் இயங்கும் மிகப் பெரிய ஆய்வுக்கூடமாக விளங்கி வருகிறது. தற்போதுள்ள விண்வெளி ஆய்வு நிலையத்தின் செயல்திறன் இரண்டு ஆண்டுகளில் முடிவடைவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்பின் 2030-2050 களுக்கு இடையே பூமியில் ஏதாவது ஒரு இடத்தில் இது விழும் என கூறப்படுகிறது.

இந்த சர்வதேச விண்வெளி நிலையம் 1998-ல் ரஷ்யா மற்றும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களால் கூட்டாக அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக ரஷ்யா அமெரிக்கா இடையே பல்வேறு
பிரச்சனை மூண்டு வருகிறது.

ரஷ்ய எதிர்கட்சி தலைவர் நவால்னி உயிரிழந்தால் கடும் சவால்களை சந்திக்க நேரிடும் என ரஷ்யாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யா உக்ரைன் எல்லை பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories