December 5, 2025, 7:14 PM
26.7 C
Chennai

ஹிந்து அமைப்பினர் மீது பொய்வழக்கு போட்டு அச்சுறுத்தும் தமிழக போலீஸார்! :ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு கண்டனம்!

rss press meet on hindu activists arrest issue - 2025

4-2-22 அன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஆர்.எஸ்.எஸ்.தென்பாரத செயலாளர் இராஜேந்திரன் பத்திரிக்கை அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் காவல்துறையின் பொய் வழக்கால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, மதுரையைச் சேர்ந்த குடும்பங்கள், மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தென் பாரத செயலாளர் திரு. இராஜேந்திரன், இந்து முன்னணி மாநில செய்தித் தொடர்பாளரும், சென்னை மாநகரத் தலைவருமான திரு. இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடந்த 21.1.2022ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் திம்மையம்பட்டி கிராமத்தில் நடந்த சம்பவத்திற்குக் காரணமாக இரண்டு பெண்களை ஊர் பொதுமக்கள் முன்னிலையில் காவல்துறையில் ஒப்படைத்து வாய்மொழியாக கொடுத்த புகாரின்
பேரில் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 24.1.2022 அன்று கணேஷ்பாபு மீது கொடுக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுப்போம் என காவல்துறை ஆய்வாளர் கூறியதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் எனக் கூறியதற்கு எழுத்துப்பூர்வமான புகாரை கொடுங்கள் என கூறியதால், 28.1.2022ஆம் தேதி கணேஷ்பாபு கொடுத்த புகாரை பதிவு செய்த சி.எஸ்.ஆர். 30/2022 என்ற மனு ரசீதை கொடுத்து, இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், 29:1.2022 அன்று புதுக்கோட்டை திம்மையம்பட்டி, இருந்திரப்பட்டி கிராமம் திரு. கணேஷ்பாபு என்பவர் மீது பொய் வழக்குப் போட்டு நள்ளிரவில் கைது செய்து, கடுமையாக நடந்துகொண்டுள்ளனர் காவல்துறையினர். ஒட்டுமொத்த கிராமமும் கணேஷ்பாபு கைதினை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

31.1.2022 அன்று நள்ளிரவு மதுரையில் திரு.ராசாகண்ணு உட்பட 6 பேர் மீது நள்ளிரவில் கைது செய்து பொய் வழக்கை காவல்துறை போட்டுள்ளனர். காவல்துறை இவ்விரு சம்பவங்களிலும் சட்டவிரோதமாக பல பிரயோகம் செய்தும், அந்த குடும்ப பெண்களிடம், பெரியவர்களிடம் ஆபாசமாக, மனம் நோகும்படி. அச்சுறுத்தலாகவும் பேசி மிரட்டியுள்ளனர்.

இந்த இரண்டு சம்பவங்களும் காவல்துறை ஏன் செய்தது? கைது செய்யப்பட்டவர்கள் கிராம பொது மக்களுடன் சேர்ந்து சட்டவிரோதமான கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்தைத் தடுத்து, சட்டப்படி காவல்துறையில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுத்தவர்கள். நாளுக்கு நாள் கிறிஸ்தவர்களின் மோசடி மதமாற்றப் பிரச்சாரத்தை எதிர்த்து வரும் நிலையில் அதனை முறியடிக்க, அப்பாவி பொதுமக்களை அதிகார துஷ்பிரயோகம் செய்து மிரட்டிட காவல்துறையும் தமிழக அரசும் இதுபோல் நடந்துகொண்டுள்ளது. தமிழகத்தில் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் கன்னியாகுமரியில் ஜார்ஜ் பொன்னையா என்ற பாதிரியார் கிறிஸ்தவர்கள் போட்ட பிச்சையில் வந்தது திமுக அரசு இனி நாங்கள் சொல்வது தான் திமுக அரசு செய்யும் என்றது அனைவரும் அறிவர், இதனை சுயமரியாதை பேசும் திமுகவோ, தமிழக அரசோ கண்டிக்கவோ, மறுக்கவோ இல்லை.

இந்நிலையில் தொடர்ந்து கிறிஸ்தவர்கள் இந்துக்களின் நம்பிக்கைகளை, இந்துக்களின் கடவுள்களை பற்றி தரக்குறைவாக பேசி வருகின்றனர் ஆனால், இது குறித்து காவல்துறையில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை ஆதாரப்பூர்வமாக தெரிவிக்க முடியும். ஆனால், இந்துக்கள் மீது பொய் வழக்குப்போட்டும் குண்டாஸ் சட்டத்தை ஏவியும் தொடர்ந்து காவல்துறை செய்து வருகிறது.

கிறிஸ்தவர்களின் மதவெறி பேச்சுக்களும், மோசடி மதமாற்ற நடவடிக்கைகளையும் தமிழகத்தில் மதப்பூசல்களை, மத சச்சரவுகளை உருவாக்கும் சர்வதேச சதியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நேர்மையாக நடைபெற வேண்டும் என தமிழக முதல்வர் அக்கறையோடு செயல்பட நினைத்தால், காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகம், இந்துக்கள் மீது போடப்படும் பொய் வழக்குகளை கைவிட புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்கை ரத்து செய்வதுடன், அந்த குடும்பத்தினரிடம் கண்ணியக் குறைவாக நடந்துகொண்ட காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்திரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக அரசு சட்டவிரோத கிறிஸ்தவ பிரச்சாரம், மோசடி மதமாற்றம் ஆகியவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தின் பொது அமைதி, சட்டம் ஒழுங்கு, நல்லிணக்கம் பேணப்பட தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்… என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories