
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள எல்லாபுரம் பகுதியில் 400 ஆண்டுகள் பழமையான நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள எல்லாபுரம் பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகின்றார்.
விவசாயியான இவர் தனது நிலத்திற்கு அருகே உள்ள தரிசு நிலத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்துள்ளார்.
அப்போது மண்ணுக்கு அடியில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கம் மற்றும் நந்தி சிலை ஆகியவற்றை கண்டெடுத்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று சிலைக்கு அபிஷேகம் செய்ததோடு வழிபாடும் செய்துள்ளனர்.
பின்னர் கிராம நிர்வாக அதிகாரி, வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிலை பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.