கணவரைப் போல் நாட்டுக்கு சேவை! மறைந்த இராணுவ வீரரின் மனைவி இராணுவத்தில் தேர்ச்சி!

reka devi - 2026

கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் உயிர்நீத்த மத்தியப் பிரதேச ராணுவ வீரர் நாயக் தீபக் சிங் என்பவரின் மனைவியும், தனது கணவரை போல நாட்டிற்கு சேவை செய்யும் பொருட்டு ராணுவத்தில் தன்னை இணைத்துக்கொள்ளவுள்ளார்.
இதற்காக ராணுவத் தேர்வில் அவர் தேர்ச்சிபெற்றுள்ளார்.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி நள்ளிரவில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவினர். அவர்களை நமது வீரர்கள் தடுத்தனர்.

இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த 20 வீரர்களில் ஒருவர் மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள ஃபராண்டா கிராமத்தைச் சேர்ந்த நாயக் தீபக் சிங் கஹர்வார்.

எட்டு ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றிவந்த இறப்பதற்கு ஒரு வருடத்துக்கு முன்புதான் திருமணம் செய்துள்ளார். திருமண பந்தத்தின் ஆரம்பகட்டத்திலேயே சீனா வீரர்களின் அத்துமீறலால் உயிரை இழந்துள்ளார்.

கார் ரெஜிமென்ட்டின் 16-வது பட்டாலியனை சேர்ந்த இவரின் வீரத்தை பாராட்டி வீர் சக்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதனை தீபக் சிங்கின் மனைவி ரேகா தேவி பெற்றுக்கொண்டார்.

Deepak singh - 2026

ரேகா தேவி ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவர்தான் தற்போது ராணுவத்தில் தன்னை இணைத்துக் கொள்ளவுள்ளார். இதற்கான ராணுவத் தகுதித் தேர்வான ஆளுமை மற்றும் நுண்ணறிவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ரேகா தேவி, சென்னை பரங்கிமலையில் அமைந்துள்ள ராணுவ அதிகாரிகளுக்கான (ஓடிஏ) பயிற்சி அகாடமியில் பயிற்சிக்கு சேரவுள்ளார்

23 வயதாகும் ரேகா தேவி அலகாபாத்தில் நடந்த SSB (Services Selection Board) நேர்காணலில் தேர்ச்சிபெற்ற பிறகே, அவர் பெயர் ராணுவப் பயிற்சி அகாடமியில் சேருவதற்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ராணுவத்தில் லெப்டினன்ட்களாக ரேகா தேவி நியமிக்கப்படுவதற்கு முன்பு இந்த அகாடமியில் ஒன்பது மாதங்கள் பயிற்சி பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவர் நாட்டுக்காக செய்த அதே சேவையை தானும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் ரேகா தேவி ஆசிரியர் வேலையை துறந்துவிட்டு, இந்த தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

SSB நேர்காணலுக்குத் தகுதிபெற USPC ஆணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பாதுகாப்புச் சேவைத் தேர்வில் கலந்துகொள்வது அவசியம். ஆனால், நாட்டுக்காக உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிக்கு இதில் விலக்கு அளிக்கப்படுகிறது.

என்றாலும் வயது அதிகமாக இருந்தால் இதில் கலந்துகொள்ள முடியாது. ராணுவ பயிற்சி அகாடமியில் சேர்வதற்கு விண்ணப்பதாரர்கள் 19 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ரேகா தேவிக்கு 23 வயதே ஆவதால் அவரால் ராணுவ பயிற்சி அகாடமியில் இணைய முடிந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories