60 வகையான குரல்.. இரண்டே நிமிடங்கள்… 2 வயது குட்டி பெண் உலக சாதனை!

Published:

thelpiya - 2026

2 நிமிடத்தில் 60 வகையான குரல்களை எழுப்பி 2 வயது குழந்தை உலக சாதனை படைத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பி. குமாரபாளையம் அடுத்துள்ள சடையாம்பாளையத்தில் பெரியநாயகம் அவரது மனைவி எலிசபெத் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 2 வயது 5 மாதங்களே ஆனா தெல்பியா என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் அந்த குழந்தை 2 நிமிடத்தில் 60 வகையான குரல்களை எழுப்பி உலக சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாது 155 நிழல்படங்கள் என சுமார் 500 படங்களை அடையாளம் கூறியும் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இதுகுறித்து அவரது பெற்றோர்கள் கூறுகையில், எங்கள் குழந்தை பிறந்ததில் இருந்து மிகவும் சுறுசுறுப்பாக இருப்பாள், சில மாதங்களிலேய அவளது திறமையை கண்டு வியந்தோம்.

இன்று அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது எங்களை பெருமையடைய வைப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் எதிர்காலத்தில் கின்னஸ் சாதனை படைக்க முயற்சி செய்வதே எங்களின் நோக்கம் என்று கூறியுள்ளனர்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img